• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-19 10:35:14    
உருளைக்கிழங்கு இடம்பெறும் ஒரு உணவு

cri
க்ளீட்டஸ் – சீன உணவு வகைகளின் தயாரிப்பு மூலம் சீனப் பண்பாடு பற்றியும் ஓரளவு அறிந்து கொள்ள முடியும்.
க்ளீட்டஸ் – வாணி, இன்றைய நிகழ்ச்சியில் எந்த வகை உணவு பற்றி கூற இருக்கின்றோம்?
வாணி – அனேகமாக, அனைவரது சமையல் அறையிலும் காணப்படும் ஒரு பொருளை வைத்து செய்யப்படும் உணவு வகை தான். அப்பொருள் உருளைக்கிழங்கு.
க்ளீட்டஸ் – உலகில் எந்த வகை காய்கறியோ, பழமோ, உணவில் சேர்க்கப்படுவதில் உருளைக்கிழங்கின் பங்கை விட வேறு எதுவும் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை.
வாணி – பிரான்ஸ் மக்கள் அதனை நிலத்தடி ஆப்பில் என்று அழைக்கின்றனர். ரஷிய மக்கள் அதனை 2வது பொட்டி என்று அழைக்கின்றனர். ஏன் உருளைக்கிழங்கு ஐரோப்பாவைச் சீரமைத்துள்ளது என்று ஊட ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
க்ளீட்டஸ் – நீங்கள் அழகாக உருளைக்கிழங்கைப் பாராட்டினீர்கள்.
வாணி – இது வாணியின் பாராட்டு அல்ல. பொதுவான கருத்தாகும்.
க்ளீட்டஸ் – இன்றைய உலகில், உணவு தானியங்களின் விலை அதிகமாக உயர்ந்த நிலைமையில், உருளைக்கிழங்கின் முக்கியத்துவம் மக்காச்சோளம் மற்றும் கோதுமையைத் தாண்டியுள்ளது என்று கூறலாம். சரி, இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெறும் உணவில், உருளைக்கிழங்கை எப்படி சமைக்க வேண்டும்?
வாணி – மிகவும் எளிதான முறையில் உருளைக்கிழங்கைச் சமைக்க இருக்கின்றோம்.
க்ளீட்டஸ் – நல்லது. தேவையான பொருட்கள் பற்றி கூறுங்கள்.
வாணி – முதலில்,
நடுத்தர அளவுடைய உருளைக்கிழங்குகள் 2
காய்ந்த சிவப்பு மிளகாய் 2
எள்ளு ஒரு தேக்கரண்டி
சிவப்பு மிளகு அரை தேக்கரண்டி
சோம்பு அரை தேக்கரண்டி
உணவு எண்ணெய் 2 தேக்கரண்டி
உப்பு போதிய அளவு


க்ளீட்டஸ் – வாணி, இன்றைய உணவில் முக்கிய பொருள் உருளைக்கிழங்கு மட்டும் தான்.
வாணி – ஆமாம். முதலில், அவற்றின் தோலை பிரித்து கொள்ளுங்கள். பிறகு, தேங்காய் துருவி் மூலம் அவற்றை துருவிக் கொள்ள வேண்டும்.
க்ளீட்டஸ் – ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, துருவிய உருளைக்கிழங்கை அதில் கொட்டவும்.

வாணி – கத்தரிக்கோல் மூலம் காய்ந்த சிவப்பு மிளகாய்களை சிறிய அளவாக கத்தரித்துக் கொள்ளுங்கள். பிறகு, வாணலியை அடுப்பின் மேல் வைத்து, காய்ந்த மிளகாய், சிவப்பு மிளகு, எள்ளு, சோம்பு ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கவும்.
க்ளீட்டஸ் – வதக்கப்பட்ட பொருட்களை வாணலியிலிருந்து வெளியேற்றி, மாவாக்க வேண்டும்.
வாணி – வாணலியை மீண்டும் அடுப்பின் மேல் வைத்து, அதில் உணவு எண்ணெயை ஊற்றவும். சூடான எண்ணெயை தயாரிக்க வேண்டும். பிறகு எண்ணெயை வதக்கப்பட்ட மிளகாய் மாவில் ஊற்றலாம். இப்போது மிளகாய் எண்ணெய் தயார்.

க்ளீட்டஸ் – வேறு ஒரு சுத்தமான வாணலியில் தண்ணீரை சூடுபடுத்துங்கள். துருவப்பட்ட உருளைக்கிழங்கை அதில் போட்டு, சுமார் ஒரு நிமிடம் வேகவிடுங்கள்.
வாணி – வாணலியிலிருந்து வெறியே எடுக்கப்பட்ட உருளைக்கிழங்கை தண்ணீரில் குளிராக்க வையுங்கள். அவற்றை மிளகாய் எண்ணெய், உப்பு ஆகியவற்றுடன் கிளறவும்.

க்ளீட்டஸ் – இப்போது இன்று சுவையான உருளைக்கிழங்கு உணவு தயார்.
வாணி – உருளைக்கிழங்கு பற்றிய உணவு வகைகள் இன்னும் அதிகமானவை.
க்ளீட்டஸ் – எதிர்கால நிகழ்ச்சிகளில் அவற்றின் தயாரிப்பு முறை பற்றி மேலும் எடுத்து கூறுவோம்.