• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-22 09:19:54    
துணைத் தலைமை பொறியியலாளர் Yang Fenglan அம்மையார்

cri

நைஜர் நாட்டின் நீர் வினியோகத் திட்டப்பணிக்கு சீனா அளிக்கும் உதவி பற்றியும், பெய்ஜிங் மாநகராட்சி நீர் சேமிப்பு திட்ட வடிவமைப்பு ஆராய்ச்சி கழகத்தின் துணைத் தலைமை பொறியியலாளர் Yang Fenglan அம்மையார் பற்றியும் உங்களுக்கு கூறுகின்றோம்.
நீர் உயிர் வாழ்வின் ஊற்று மூலமாகும் என மக்கள் கூறுகின்றனர். வறட்சிப் பிரதேசங்களில் நீர் மேலும் பெரும் மதிப்புள்ள பொருளாக கருதப்படுகிறது. 2005ஆம் ஆண்டு ஜுன் 24ஆம் நாள், நைஜர் நாட்டின் Zinder நகரவாசிகளைப் பொறுத்த வரை, மகிழ்ச்சி தரக் கூடிய நாளாகும். அந்த நாள், Zinder மக்கள் அனைவரும் வீட்டிலிருந்து வெளியேறி, பல ஆண்டுகளாக தங்களுக்குத் தொந்தரவாக அமைந்த குடி நீர் பிரச்சினை தீர்க்கப்பட்டதற்காக கொண்டாட்டம் நடத்தினர். வைரம் என கருதப்பட்ட நீர் வினியோகத் திட்டப்பணி மூலம், அதன் வடிவமைப்பாளர் Yang Fenglan அம்மையாரை அவர்கள் நெஞ்சில் வைத்திருந்தனர். பெய்ஜிங் மாநகராட்சி நீர் சேமிப்பு திட்ட வடிவமைப்பு ஆராய்ச்சி கழகத்தின் துணைத் தலைமை பொறியியலாளர் Yang Fenglan அம்மையார், ஒரு பணிக் குழுவுக்குத் தலைமை தாங்கி 4 முறை நைஜருக்குச் சென்று, Zinder நகரில் நீர் வினியோகத் திட்டப்பணியை வடிவமைத்தார். அங்களுள்ள மக்கள் அவரை திருமதி Yang என அன்புடன் அழைக்கின்றனர். அண்மையில் எமது செய்தியாளர் அவரைப் பேட்டி கண்டார்.
Zinder, நைஜரின் தலைநகராக இருந்தது. நீர் பற்றாக்குறையினால், 1927ஆம் ஆண்டு அதன் தலைநகர் இடம் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் Zinder நகர் நீண்டகாலமாக வறட்சியில் சிக்கியது. அங்குள்ள இலட்சக்கணக்கான மக்கள் அன்றாட குடி நீருக்கான உத்தரவாதமின்றி தவித்தனர். 2002ஆம் ஆண்டு செப்டெம்பர் திங்களில், சீனாவின் நீர் சேமிப்பு பொறியியலாளர்கள் முதல்முறையாக Zinderக்குச் சென்று, அந்நகருக்கான நீர் வினியோகத் திட்டப்பணியைக் கட்டியமைக்கத் துவங்கினர். Yang Fenglan அம்மையார் கூறியதாவது—

"2002ஆம் ஆண்டு செப்டெம்பர் முதல் அக்டோபர் வரை கள ஆய்வு மேற்கொண்டோம். திரும்பிய பின் அடிப்படை வடிவமைப்பை செய்தோம். 2003ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் மே திங்கள் வரை, 2வது முறை கள ஆய்வு செய்து அறிக்கையை வழங்கினோம். 2003ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் இத்திட்டப்பணியின் கட்டுமானம் தொடங்கியது" என்று அவர் கூறினார்.
வைரத்தின் வடிவிலான நீர் சேமிப்பு கோபுரம், Zinder நகரின் அடையாளக் கட்டிடங்களில் ஒன்றாகும். 2005ஆம் ஆண்டு ஜுன் 24ஆம் நாள், அதாவது 21 திங்கள் கால கள ஆய்வு, வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்துக்குப் பின், Zinder நகரில் நீர் வினியோகத் திட்டப்பணியான இந்த கோபுரம் சீனாவின் உதவியுடன் கட்டி முடிக்கப்பட்டது. அந்த நாள் Zinder மகிழ்ச்சி கடலில் மூழ்கியது. ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்கள் வைரத்தின் வடிவிலான நீர் சேமிப்பு கோபுரத்தின் கீழ் ஒன்று கூடி மகிழ்ந்தனர். நைஜர் அரசுத் தலைவர், நாடாளுமன்றத் தலைவர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் சிறப்பு விமானம் மூலம் Zinder நகருக்குச் சென்று கட்டிமுடிக்கப்பட்ட இந்தத் திட்டப்பணியின் திறப்பு விழாவில் பங்கேற்றனர்.
சீனப் பொறியியலாளர்களின் பணிகள் நைஜர் அரசு மற்றும் பொது மக்களின் பாராட்டையும் மதிப்பையும் பெற்றுள்ளன. Yang Fenglan உள்ளிட்ட சீனப் பொறியியலாளர்களை நைஜர் அரசுத் தலைவர் 4 முறை வரவேற்று உரையாடினார். மேலும் 2006ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் அவர்களுக்கு நைஜர் அரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்பட்டது.

1 2