• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-03 16:40:48    
மனிதவளம்

cri
ஒரு மனிதனின் ஐந்து அம்சங்களை பற்றி உங்களுக்கு தெரியுமெனில், அமைச்சர் பதவியில் அவரை அமர்த்தலாமா என்பது தெரிந்துவிடும் என்கிறார் லி கெ. கிமு 5ம் நூற்றாண்டு வாக்கில் வாழ்ந்த இவர் பேரரசரின் மகனாக இருந்து, சூழ்ச்சியால் மரணத்தை ஏற்க நேர்ந்து, இறப்புக்கு பிறகாக, இளவரசனாக முடிசூட்டப்பட்டவர். அவர் கூறும் ஐந்து அம்சங்கள் இவைதான்: ஒருவன் பெரிய மனிதனாக மாறுவதற்கு முன், அவன் எவரோடெல்லாம் பழகுகிறான் என்பதை கவனி, அவன் செல்வந்தனானால் யாருக்கு அவன் பணம் கொடுக்கிறான் என்பதை கவனி, அவன் உயர் பதவியேதும் அடைந்துவிட்டால், யாருக்கு அவன் பதவி உயர்வு அளிக்கிறான் என்பதை கவனி. அவன் துன்பத்தில் இருக்கையில், எதையெல்லாம் அவன் செய்ய மறுக்கிறான் என்று கவனி. அவன் ஏழையாகும் போது, எதை அவன் ஏற்க மறுக்கிறான் என்பதை கவனி. ஆக அமைச்சர் பதவிக்கு ஆள் தெரிவு செய்வதோ, ஆடு மேய்க்க ஆள் தேடுவதோ, உரிய நபர்களை தேர்ந்து, தெரிவு செய்யும் ஆற்றல் கொண்டவர்கள் இருப்பின் அது, வெற்றிக்கு வழி தேடித்தரும் என்பது உறுதி.
இதைத்தான் இன்றைக்கு மனிதவளம், மனிதவள மேலாண்மை, மனிதவள மேம்பாடு என்று கூறுகின்றனர். யாருக்கு எந்த பொறுப்பை தருவது என்பதை பற்றிய தெளிவும், நுட்பமும் தெரிந்துவிட்டால், நாம் முன்னெடுக்கும் செயல்கள் எதுவாயினும், வெற்றியை சுவைக்கும் சாத்தியம் வலுவாகிவிடும்.
இனி தொடரும் வாரங்களில் இப்படி, மனிதவள ஆற்றல், திறமை மற்றும் பொருத்தமான பணி ஆகியவை சார்ந்த கதைகள் உங்களுக்காக வழங்கப்படும், கேட்டு மகிழுங்கள்.