• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-22 18:26:14    
சீனாவின் மருத்துவ அமைப்புமுறையின் சீர்திருத்தம்

cri

அண்மையில், புதிய மருத்துவ அமைப்புமுறை சீர்திருத்தத்தை, சீன அரசு மேற்கொண்டது. அடுத்த 3 ஆண்டுகளில், அடிப்படை மருத்துவ உத்தரவாத அமைப்புமுறையில், நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களின் மக்களை சேர்த்து, மருத்துவச் செலவைக் குறைக்க வேண்டும். ஆகையால், 85 ஆயிரம் கோடி யுவானை ஒதுக்கி, மருத்துவ மற்றும் சுகாதாரத்துக்கான அடிப்படை வசதி கட்டுமானத்தை அதிகரித்து, மக்கள் சிகிச்சை பெறும் நிலை மற்றும் சூழலை மேம்படுத்த சீன அரசு முயற்சி செய்து வருகிறது.

புதிய மருத்துவ அமைப்புமுறை சீர்திருத்தத்தின்படி, மருத்துவ மற்றும் சுகாதார துறைக்கான ஒதுக்கீட்டை, சீன அரசு பெரிதும் அதிகரிக்கும். இதன் மூலம், பொது மக்கள் நலன்களைப் பெறலாம். அண்மையில், 85 ஆயிரம் கோடி மதிப்புள்ள மருத்துவ சீர்திருத்த நிதியின் பகிர்வை, சீன துணை நிதி அமைச்சர் wangjun அறிமுகப்படுத்தினார். இது குறித்து, அவர் சீன அரசவையின் செய்தியாளர் கூட்டத்தில் கூறியதாவது:

இந்த நிதியில் பெரும் பகுதி, அடி மட்ட நிலையில் பயன்படுத்தப்படுவதற்கு உத்தரவாதம் செய்ய வேண்டும். குறிப்பாக, சீனாவின் மத்திய மற்றும் மேற்கு பிரதேசங்கள் இதில் அடங்குகின்றன. அதேவேளையில், கிழக்கு பிரதேசத்துக்கும் நிதியுதவி பகிர்ந்தளிக்கப்படும் என்று அவர் கூறினார்.

சிகிச்சைச் செலவு அதிகம் என்ற பிரச்சினையில், சீன மக்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். மருந்து விலை உயர்வு உள்ளிட்ட காரணங்கள், பொது மக்களுக்கு சுமையாகவுள்ளன.

தேசிய அடிப்படை மருந்து அமைப்புமுறை என்ற அடிப்படையில், மருந்து வினியோக உத்தரவாத அமைப்புமுறையை உருவாக்கி, மருந்து விலையைக் குறைக்க வேண்டும் என்று புதிய மருத்துவ அமைப்புமுறை சீர்திருத்த திட்டம் கோரியுள்ளது. புதிய சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்த பின், மருந்து விலை பெரிதும் குறையும் என்று சீன சுகாதார அமைச்சர் chenzhu கருத்து தெரிவித்தார்.

தேசிய அடிப்படை மருந்து அமைப்புமுறையின் மூலம், மருந்து விலை பற்றிய புதிய நிர்வாக நடவடிக்கைகள் ஆழமாக்கப்படும். சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணைத் தலைவர் pengsen, இச்செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

மருந்து விலையை கட்டுப்படுத்தும் அளவை, உரிய முறையில் சரிப்படுத்தி, பொது மக்கள் சிகிச்சை பெறும் செலவைக் குறைக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு, சிகிச்சைச் செலவு அதிகம் என்ற பிரச்சினையை பயனுள்ள முறையில் சீன அரசு தீர்க்கலாம் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

அடிப்படை மருத்துவ உத்தரவாத அமைப்புமுறையில் சேரும் மக்களின் எண்ணிக்கையும், உத்தரவாத நிதித் தொகையும் போதியளவில் அமையவில்லை. தற்போது, நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களின் உழைப்பாளர்கள், குடிமக்கள் ஆகியோருக்கான அடிப்படை மருத்துவ காப்புறுதியும், புதிய கிராமப்புற ஒத்துழைப்பு மருத்துவமும் முக்கியமாக கொண்ட சீனாவின் அடிப்படை மருத்துவ உத்தரவாத அமைப்புமுறையில், சுமார் 110 கோடி மக்கள் சேர்ந்துள்ளனர். இருந்த போதிலும், ஏறக்குறைய 20 கோடி மாணவர்களும், நகரங்களுக்குச் சென்று பணி புரியும் விவசாயத் தொழிலாளர், இந்த உத்தரவாத அமைப்புமுறையில் சேரவில்லை. ஆகையால், தற்போதைய அடிப்படை மருத்துவ உத்தரவாத அமைப்புமுறை இன்னும் மேம்படவில்லை.

1 2