• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-15 21:21:42    
நகரத்தில் வேலை வாய்ப்பை நாடும் விவசாயத் தொழிலாளர் Liu Yongzhen

cri

நிதி நெருக்கடி உலகம் முழுவதற்கும் பாதிப்பை ஏற்படுத்திய பின்னணியில், சீனாவில் சுமார் 20 கோடி விவசாயத் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுவது என்பது, சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் பிரச்சினையாக மாறியுள்ளது. அண்மையில், எமது வானொலி நிலையத்தின் செய்தியாளர் ஒருவர் Liu Yongzhen என்ற ஒரு விவசாயத் தொழிலாளரைப் பேட்டி கண்டார். சாதாரண ஒரு விவசாயி, நகரில் வேலை வாய்ப்பை நாடுவதில் எதிர்கொண்ட இன்னலையும், கடினம் மற்றும் சவாலைச் சந்தித்த போது அவர் வெளிப்படுத்திய நம்பிக்கையையும் நடைமுறைக்கு ஏற்ற மனப்பாங்கையும் எமது செய்தியாளர் நேரில் உணர்ந்தார். இன்றைய நிகழ்ச்சியில் நகரத்தில் வேலை வாய்ப்பை நாடும் விவசாயத் தொழிலாளர் Liu Yongzhen பற்றிக் கூறுகின்றோம்.

"சந்திர நாட்காட்டியின்படி, இவ்வாண்டின் முதல் திங்கள் 17ஆம் நாள் இங்கே வந்தடைந்தேன். இன்று வரை வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. வேலை வாய்ப்பு மிகக் குறைவு. இங்கே வந்த தொழில் நிறுவன உரிமையாளர்கள் எண்ணிக்கையும் மிகக் குறைவு."

"Shi Jia Zhuang, Qing Dao, Tai Yuan ஆகிய நகரங்களுக்குச் சென்றேன். சென்ற இடங்கள் குறைவாக இல்லை. ஆனால் இவ்வாண்டில் வேலை வாய்ப்பு குறைவு" என்று விவசாயத் தொழிலாளர்கள் சிலர் கூறினார்கள்.

Bei Jing மேற்கு தொடர் வண்டி நிலையத்துக்கும் Liu Li Qiao தொலைதூர பேருந்து நிலையத்துக்கும் சில நூறு மீட்டர் தொலைவில் உள்ள Liu Li Qiao மேம்பாலத்துக்கு அருகில், விவசாயத் தொழிலாளர்கள் தற்சார்பாக உருவாக்கிய உழைப்பாற்றல் சந்தை ஒன்று உள்ளது. சீன மக்களைப் பொறுத்த வரை மிக முக்கியமான வசந்த விழாவுக்குப் பின், நாடு முழுவதன் பல்வேறு இடங்களைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள் இங்கே வந்து, குளிர் காற்றில், வேலைக்கு அமர்த்துவோரின் வருகைக்காக காத்திருப்பதோடு, வேலை வாய்ப்பு பற்றியும் உரையாடுகின்றனர்.

இந்த விவசாயத் தொழிலாளர்களில் ஹேபெய் மாநிலத்தின் Wu Yi மாவட்டத்தைச் சேர்ந்த Liu Yongzhen என்பவர் இங்கு பல நாட்களாக காத்திருந்தார்.

"உரிய வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. எனக்கு பொருந்திய வேலை வாய்ப்பு காணவுமில்லை. வேலை வாய்ப்பு இல்லை என்பதால் Liu Li Qiao வந்து முயற்சிக்கின்றேன்" என்று Liu Yongzhen கூறினார்.

கடந்த சில ஆண்டுகளின் இதே காலத்தில் வேலையில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார். இவ்வாண்டில் தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்களுடனான தொடர்பையும் உறவையும் பயன்படுத்திய போதிலும் அவர் இன்னும் வேலை வாய்ப்பு பெறவில்லை. ஆகவே Liu Li Qiao விவசாயத் தொழிலாளர் உழைப்பாற்றல் சந்தைக்கு வந்து வாய்ப்பை நாட வேண்டியிருக்கிறது. வேளாண் துறையில் அவரது குடும்பத்தின் நிகர வருமானம், 20 ஆண்டுகளுக்கு முந்தைய ஆயிரத்துக்குட்பட்ட யுவானிலிருந்து கடந்த ஆண்டின் 10 ஆயிரம் யுவானாக அதிகரித்துள்ளது. குடும்பத்தினரின் அன்றாட வாழ்க்கைக்கான செலவு போக ஒரு சிறு தொகை மிஞ்சியது. ஆனால் மகனின் பல்கலைக்கழகக் கல்விக் கட்டணம் கட்டவும் அவருக்கான வாழ்க்கைச் செலவை வழங்கவும் Liu Yongzhen பல ஆண்டுகளாக வெளியூரில் வேலை செய்து வருகிறார்.

2008ஆம் ஆண்டு நல்ல ஆண்டாகும். ஆண்டின் இறுதியில் வீடு திரும்பிய போது, கையில் சுமார் 30 ஆயிரம் யுவான் சேமிப்பு மிஞ்சியது. ஆனால் வசந்த விழாவுக்குப் பின், Liu Li Qiao மேம்பாலத்தின் பக்கத்தில் குளிர் காற்றில் 10 நாட்களுக்கு மேல் நின்றும், உரிய வேலை வாய்ப்பு ஒன்றும் கிடைக்கவில்லை என்று Liu Yongzhen கூறினார். தொடக்கத்தில் ஒரு நாளுக்கு 120 யுவான் ஊதியத்தை எதிர்பார்த்த அவர், இப்போது 100 யுவான் கிடைத்தால் சரி என்ற நிலைக்கு வந்துள்ளார். நாளுக்கு ஏன் 60, 70 யுவான் மட்டுமே கிடைத்தாலும் அவர் ஏற்றுக் கொள்ளலாம். அவர் மேலும் கூறியதாவது—

"நீண்டகாலமாக வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் கலவைப்படுகின்றேன். பெரும் தொகை சம்பளம் கிடைக்காவிட்டாலும் சரி. வாழ்க்கைச் செலவு பிரச்சினையைச் சமாளிக்க சிறு வேலை வாய்ப்பு கிடைத்தாலும், அந்த வேலையை செய்வேன். சில சமயம் மன வருத்தம் அடைகின்றேன். என் குடும்பத்தில் எனது மனைவி மட்டும் வீட்டில் தங்கி வயலில் உழைக்கிறார். இது அவருக்கு சிரமமானதாகும்" என்றார் Liu Yongzhen.

1 2