• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-27 15:10:26    
20வது ஹாங்காங் நூல் பொருட்காட்சி

cri
20வது ஹாங்காங் நூல் பொருட்காட்சி, ஜூலை திங்கள் 25ம் நாள், ஹாங்காங் பொருட்காட்சி மையத்தில் துவங்கியது. ஆகியாவில் மிகுந்த செல்வாக்கு வாய்ந்த ஒரு நூல் பொருட்காட்சி, இவ்வாண்டு, சுமார் 20 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 500 நிறுவனங்களை ஈர்த்துள்ளது. இதில் கலந்துகொண்ட நிறுவனங்களில், சீனப் பெருநிலப்பகுதி, ஹாங்காங், மகௌ மற்றும் தைவானின் சீன மொழி நூல் வெளியீட்டகங்கள் முக்கிய பங்காற்றின. சீன மொழி நூல்களின் ஈர்ப்பை எடுத்துகாட்டு விழாவாக, ஹாங்காங் நூல் பொருட்காட்சி மாறியுள்ளது.

ஹாங்காங் நூல் பொருட்காட்சி, ஹாங்காங் வர்த்தக வளர்ச்சி ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சர்வதேச நூல் பொருட்காட்சியாகவும் விழாவாகவும் இதுவாகும். 1990ம் ஆண்டு நிறுவப்பட்ட பின், சீன மொழி நூல்களை பரவல் செய்யும் அரங்காக இது மாறியுள்ளது. இதில் கலந்துகொண்ட மக்கள் எண்ணிக்கை, 2 இலட்சத்திலிருந்து 8 இலட்சத்து 50 ஆயிரமாக உயர்ந்தது.

இவ்வாண்டு, 7 நாள் நீடித்த இந்நூல் பொருட்காட்சி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல வெளியீட்டகங்களை ஈர்த்தது. இதில், சீனப் பெருநிலப் பகுதியைச் சேர்ந்த ஈர்ப்பு மிகுந்த 100 வெளியீட்டகங்களின் 1300 வகை நூல்கள், இந்நூல் பொருட்காட்சியில் மிகவும் வரவேற்கப்பட்டன. நூல் பொருட்காட்சியில், சீனா, முன்பு போலவே ஆக்கப்பூர்வமாக பங்காற்றி வருகிறது. இதன் மூலம், சீன மொழி நூல்களை பரவல் செய்ய வேண்டும். ஹாங்காங் நூல் துறையில், பெருநிலப் பகுதி தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இப்பொருட்காட்சியில் இடைவிடாமல் கலந்துகொண்டு வருகிறது என்று சீனத் தேசிய செய்தி வெளியீட்ட ஆணையத்தின் தலைவர் லியூ பின் செ துவக்க விழாவில் தெரிவித்தார்.

நண்பர்களே, 20வது ஹாங்காங் நூல் பொருட்காட்சி என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.