• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-26 10:32:30    
சர்வதேச அமைதிக் காப்புப் பணியில் சீனாவின் பங்களிப்பு

cri
1948ம் ஆண்டு மே 29ம் நாள், ஐ.நா பாதுகாப்பவை நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், முதல் மத்தியக் கிழக்குப் போருக்குப் பின், அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை கண்காணிக்க, 36 இராணுவப் பார்வையாளர்கள் ஜெருசலேமுக்கு அனுப்பப்பட்டனர். அது முதல் ஐ.நாவின் அமைதிக் காப்பு நடவடிக்கை துவங்கியது. 61 ஆண்டுகளாக, இந்த அமைதிக் காப்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நீண்டகால பணியில், மென்மேலும் அதிகமான சீன அமைதிக் காப்புப் பணியாளர்கள், உலக அமைதி மற்றும் கூட்டு வளர்ச்சியைப் பேணிக்காக்கும் புனிதக் கடமையை நிறைவேற்றியுள்ளனர்.
2007ம் ஆண்டு நவம்பர் 23ம் நாளிரவு, சூடானின் டார்பூருக்குச் செல்லும் சீனாவின் அமைதிக் காப்புப் படையின் முன்னேற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த 135 அதிகாரிகள் மற்றும் போர்வீரர்கள், விமானத்தில் நுழைந்தனர். அப்போது, அவர்கள் உணர்ச்சி வசப்பட்டனர்.

இந்தக் கடமை, கடினமானது. மாபெரும் பொறுப்பும் மிக்கது. எங்களால் இயன்ற அளவில் பாடுபட்டு, தலைசிறந்த முறையில் பணியாற்றி, ஐ.நா ஒப்படைத்த பல்வேறு கடமைகளை செவ்வனே நிறைவேற்றுவோம். சூடானின் டார்பூர் பிரதேசத்தின் நிதானம் மற்றும் வளர்ச்சியை முன்னேற்றி, உலக அமைதியைப் பேணிக்காப்பதற்கு, மேலதிக பங்கு ஆற்றுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த அமைதிக் காப்புப் பணியில் ஈடுபடும் சீன முன்னேற்பாட்டுக் குழு, சூடானின் டார்பூர் பிரதேசத்தில் ஐ.நாவால் பரவல் செய்யப்பட்ட முதல் அமைதிக் காப்புப் படையாகும்.
அவர்கள் டார்பூர் பிரதேசம் சென்றடைந்த சில திங்களுக்குப் பின், எமது செய்தியாளர்கள் அங்கு சென்று, உள்ளூரின் கடினமான வாழ்க்கையை நேரில் கண்டனர். இராணுவப் பொறியியலாளர் குழுவின் தலைவர் Shangguanlinhong கூறியதாவது,
டார்பூர் பிரதேசத்தில் மணல் காற்று வீச்சு அதிகம். சில சமயம், பார்வைத்திறன் சில மீட்டர் மட்டுமே. நண்பகல், தட்ப வெப்பம், 42 டிகிரி செல்சியஸுக்கு மேலாகும். துவக்கக் காலத்தில், முகாம் செடி கொடியேதுமின்றி வரண்டு கிடந்தது என்று அவர் கூறினார்.
சுற்றுச்சூழல் கடினமாக இருந்த போதிலும், சீன இராணுவத்தினர் முகாமின் கட்டுமானப் பணியை உயர் பயனுள்ள முறையில் மேற்கொண்டனர். குறுகிய

காலத்தில் அவர்கள் விமான நிலையம், பாதைகள், பாலங்கள் முதலியவற்றைக் கட்டியமைக்கும் கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றினர். சீனாவின் அமைதிக் காப்புப் படையின் உறுப்பினர்கள், அற்புதத்தை செய்தனர் என்று ஐ.நா-ஆப்பிரிக்க ஒன்றிய டார்பூர் பிரச்சினை பற்றிய சிறப்புப் பிரதிநிதி Rodolphe Adada உயர்வாக பாராட்டினார்.
அதற்குப் பின், சூடான், கின்ஷாஷா காங்கோ, லைபீரியா, லெபனான் முதலிய நாடுகளுக்கான அமைதிக் காப்புக்கென, சீனா பணியாளர்களை பல முறை அனுப்பியது. இது வரை, ஐ.நா பாதுகாப்பவையில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளில், மிக அதிகமான அமைதிக் காப்புப் பணியாளர்களை அனுப்பிய நாடு, சீனாவாகும்.
கடினமான நிலையில் சிக்கிய பிரதேசங்கள் தாயகத்தை சீரமைப்பதற்கு சீன அமைதிக் காப்புப் பணியாளர்கள், உதவி செய்து, அப்பிரதேச மக்களோடு நட்பாகப் பழகி வருகின்றனர்.

சேன்ஹாய்ஹுவா அம்மையார், சீனாவைச் சேர்ந்த ஒரு மருத்துவர். 2006ம் ஆண்டு, அவர், தனது 8 வயதான மகனை விட்டு, 4வது சீன அமைதிக் காப்புப் படையுடன் இணைந்து, லைபீரியாவுக்கு சென்றார். 8 திங்கள் காலத்தில், அவர், தனது சகபணியாளர்களுடன், மருத்துவச் சிகிச்சை வழங்கிய உள்ளூர் நோயாளிகளின் எண்ணிக்கை 5000க்கு மேலாகும்.
சீனா அனுப்பிய அமைதிக் காப்புப் படைகள், கட்டியமைத்த பாதைகளின் நீளம், 7000 கிலோமீட்டருக்கு மேலாகும். சுமார் 200 பாலங்களை இப்படையினர் கட்டிமைத்துள்ளனர். 40 ஆயிரம் நோயாளிகளுக்கு மருத்துவச் சிகிச்சை வழங்கியுள்ளனர். நிலக் கண்ணி உள்ளிட்ட சுமார் 7 ஆயிரம் குண்டுகளை அகற்றியுள்ளனர். ஐ.நாவின் அமைதிக் காப்பு நடவடிக்கையில் சீனா கலந்து கொள்ளத் துவங்கிய பின் இதுவரை 8 அதிகாரிகள் கடமையில் ஈடுபட்ட போது உயிரிழந்தனர். தற்போது, சுமார் 2000 அதிகாரிகளும் படைவீரர்களும், ஐ.நாவின் 9 அமைதிக் காப்புப் பிரதேசங்களில் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐ.நாவின் அமைதிக் காப்பு நடவடிக்கையில், சீனாவின் முனைப்பான பங்கு, உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச அமைதிக் காப்புத் துறையில், சீனா மென்மேலும் முக்கியமான பங்கு ஆற்றியுள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது. சீனா, இத்துறையில் தனது பங்களிப்பின் மூலம், உலகின் எதிர்பார்ப்புக்கு மறுமொழியளித்துள்ளது என்று இவ்வாண்டு பிப்ரவரி திங்கள் ஸ்வீடனின் புகழ்பெற்ற ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வகம் வெளியிட்ட அறிக்கை சுட்டிக்காட்டியது. உலக அமைதியைப் பேணிக்காக்கும் சீனாவின் மனவுறுதியும், அதன் முக்கிய பங்கும், சீனா பொறுப்பான ஒரு வல்லரசு என்பதை உணர்த்துவதாக மென் மேலும் அதிகமான சீன மற்றும் வெளிநாட்டு அறிஞர்கள் நேரடியாகச் சுட்டிக்காட்டினர்.