• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-02 10:03:25    
பெய்ஜிங் மாநகரவாசிகளின் தொலைத்தொடர்பு வழிமுறையின் மாற்றம்

cri
சீனாவில் மிகவும் வரவேற்கப்பட்ட, தொலைபேசி எனும் ஒரு திரைப்படம், லூசுயீங் அம்மையாருக்கு, சுமார் 40 ஆண்டுகளுக்கு முன், ஹெய்லுங்ஜியாங் மாநிலத்தில் வேளாண் துறையில் ஈடுபட்ட நிலைமையை நினைவுபடுத்தியது. அப்போது, அவர், குடும்பத்தினருடன், முக்கியமாக கடிதத்தின் மூலம், தொடர்பு கொண்டார்.
அப்போது, தபால்காரர் வந்தால் மட்டுமே, கடிதங்களைக் காண முடியும். நாங்கள் தங்கியிருந்த இடம், தொலைத் தூரப் பிரதேசத்தில் இருந்தது. வாரந்தோறும், தபால்காரர் ஒரு முறை மட்டுமே வருவார் என்று லூசுயீங் கூறினார்.

ஹெய்லுங்ஜியாங்கில், ஏதாவது அவசரமான தேவை என்றால் மட்டுமே, அவர், பழைய ரக தொலைபேசி மூலம், பெய்ஜிங்கிலுள்ள குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியும். அத்தகைய தொலைபேசி, ஒரு மையத்திலிருந்து மற்றொரு மையத்திற்கு மாற்றி இணைத்த பிறகு பேச வேண்டும். பேசும் போது, குரல் சரியாகக் கேட்காது. சில சமயங்களில் இணைப்பு கிடைக்காது.
1980ம் ஆண்டுகளின் தொடக்கத்தில், லூசுயீங் பெய்ஜிங்கிற்குத் திரும்பி, திருமணம் செய்தார். ஆனால், அவரும், அவரது கணவர் லியொசிசாங்கும், திருமணத்திற்கு பின்பும் இருவேறு இடங்களில் தங்கியிருந்தனர். அப்போது, தொலைபேசி வசதி, குறைவாக இருந்தது. பெய்ஜிங் நகரவாசிகள், வசிப்பிட நிர்வாக அலுவலகத்தின் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முடியும். ஆனால், அப்போதைய ஊதியத்தை விட, தொலைபேசி கட்டணம், ஒப்பீட்டளவில் உயர்வாக இருந்தது.

அப்போது, தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் முன், என்ன பேசப் போகிறோம் என்பதை, எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள, ஒரு நிமிடத்திற்கு, 1.2 யுவான் கட்டணமாகும். ஆனால், அப்போது, திங்கள்தோறும் 30 யுவான் மட்டுமே எமது வருமானம். அதனால், தொலைபேசி மூலம் மிகக் குறைவாகவே தொடர்பு கொண்டோம் என்று லியொசிசாங் கூறினார்.
1 2