• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-13 15:06:12    
புகழ்பெற்ற பாடகி Cheng Fangyuan

cri

பாடல் பாடுவதில் தேர்ச்சி பெற்ற Cheng Fangyuan, சில வகை இசைக் கருவிகளை இசைக்க முடியும் என்ற போதிலும், இசை நாடகத்தில் ஈடுபடுவது அதுவே முதல்முறை. நடிகையாக அரங்கேற்றுவது அவருக்கு பெரிய சவாலாகும். ஆனால் பல்வேறு துறையினருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது, அவரைப் பொறுத்த வரை மிகப் பெரிய சவாலாகும்.
கடினமாக இருந்த போதிலும், இறுதியில் Cheng Fangyuan வெற்றி பெற்றார். அவர் பேசுகையில், மனிதருக்கு எல்லையற்ற உள்ளார்ந்த ஆற்றல் உண்டு என தாம் அறிந்து கொண்டதாக கூறினார். 
"மற்றவருடன் பழகுவதில் நான் தேர்ச்சி பெற்றவள் அல்ல. மற்றவருடன் பேச்சுவார்த்தை நடத்தவும் பேரம் பேசவும் தெரியாது. ஆனால் இசை நாடகம் எனது கனவு என்பதால் இதனை நான் நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் மனிதர்கள் அபாரமான திறமை கொண்டவர்கள் என உணர்கின்றேன். குறுகிய காலத்தில் உங்களது குணத்தை நீங்கள் மாற்ற முடியும்" என்று Cheng Fangyuan கூறினார்.

2008ஆம் ஆண்டு, சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்த 30வது ஆண்டு நினைவை முன்னிட்டு, பாடல் போன்ற ஆண்டுகள் என்ற பெரிய ரக இசை வழி நிகழ்ச்சியை பெய்ஜிங் தொலைக்காட்சி நிலையம் தயாரித்து வழங்கியது. இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராக Cheng Fangyuan இருந்தார். கடந்த 30 ஆண்டுகளில் சீனாவின் pop இசைப் பாடல் வளர்ச்சியை நேரில் கண்ட அவர் வெற்றிகரமாக இந்நிகழ்ச்சியை வழி நடத்தினார். செய்தியாளருக்கு பேட்டி அளிக்கையில், 30 ஆண்டுகாலத்தில், வாழ்க்கையைப் போல் இசையும் பெருமளவில் மாறியுள்ளது. சுருக்கம் செய்யப்பட்ட 30 ஆண்டுகாலத்தில் வேறுபட்ட இசை படைப்புகளோடு நடந்து வருகின்றேன். இந்த ஆண்டுகள் பாடல்கள் போலவே இருக்கின்றன என்று அவர் கூறினார்.
எளிமையான வாழ்க்கையை Cheng Fangyuan விரும்புகிறார். இணையதளத்தில் விலை மலிவான விமானச் சீட்டை அவர் தேடி பார்க்கிறார். விலை மலிவான இளைஞர் ஹோட்டலில் தங்குகிறார். உணர்வுகளை வெளிப்படுத்தும் இதமான வழிமுறையை தேடியெடுப்பதற்காகவும், நடைமுறைக்கு ஏற்ற இளமையான மனநிலையை கொள்வதற்காகவும் இசை மீது அவர் நன்றியுணர்வைக் கொண்டிருக்கிறார்.
1 2