• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-16 15:34:43    
பன்றியிலிருந்து மூல உயிரணுக்கள் - II

cri
இந்த ஆய்வின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிடுகையில், காலில் குளம்புள்ள விலங்கிடமிருந்து பல ஆற்றலுடைய மூல உயிரணுக்களை உருவாக்கியிருப்பது, உலகளவில் இதுவே முதல்முறை என்று ஷாங்ஹாய் உயிர் வேதியல் மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் மூல உயிரணு ஆய்வகத்தின் தலைவர் மருத்துவர் Xiao Lei கூறினார். இந்த ஆய்வை பயன்படுத்தி மனித மரபணு நோய்களின் மாதிரிகளை உருவாக்கலாம். விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்கு வழங்குகின்ற உறுப்பு மாற்று மரபணு பொறியியல் நுட்பங்களை அறியலாம். சளிக்காய்ச்சல் எ போன்ற நோய்களின் எதிர்ப்பு திறன் கொண்ட பன்றி வகைகளை உருவாக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

பன்றியை வைத்து இச்சோதனையை மேற்கொண்ட ஆய்வாளர்கள் அதன் காது மற்றும் எலும்பு மஞ்சையிலிருந்து உயிரணுக்களை எடுத்தனர். அவற்றில் பல ஆற்றலுடைய மூல உயிரணுக்களை செலுத்தினர். அதன் பிறகு புரோதங்கள் மற்றும் தாதுக்களை நச்சுயிரி மூலம் அதில் அறிமுகப்படுத்தினர். அப்போது மூல உயிரணுக்களின் முளைகள் வளர தொடங்கின. இவ்வாறு உருவாக்கப்பட்ட மூல உயிரணு முளைகள், மூல உயிரணுவின் உட்பகுதி, இடைப்பகுதி, வெளிப்பகுதி சவ்வுகளில் வேறுபடுகின்றன என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பல ஆற்றலுடைய மூல உயிரணுவை செலுத்தி பெறப்பட்ட தகவல்கள் பன்றி அல்லது பிற காலில் குளம்புள்ள விலங்குகளின் உயிரணு முளையிலிருந்து புதிய மூல உயிரணு முளைகளை ஆய்வாளர்கள் உருவாக்குவதை மிகவும் எளிதாக்கும். சீன அறிவியலாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு தகவல்கள், மூலக்கூறு, உயிரணு உயிரியல் தொடர்பான ஆய்வுகள் மற்றும் கட்டுரைகளை வெளியிடும், மூலக்கூறு உயிரணு உயிரியல் என்ற உலக புகழ்பெற்ற இதழில் வெளியாகியுள்ளது.

பன்றிகளிடம் இருந்து உருவாக்கப்படுகின்ற இந்த பல ஆற்றலுடைய மூல உயிரணுகள் பலவேறு வழிகளில் பயன்படுகின்றன. குறிப்பாக சொன்னப்போனால், உறுப்பு மாற்று சிகிச்சைகளில் மனிதர்களின் உறுப்புகளை பிறருக்கு வழங்குதே பொதுவாக நடைபெறுகின்றது. விலங்கு உறுப்புகளை மனிதருக்கு வழங்கும் சிகிச்சையின் பொறியிலுக்கும் இது மிகவும் உதவும். பன்றிகளின் உறுப்புகள் பெரும்பாலும் மனித உறுப்புகளுக்கு ஒத்ததாகவே உள்ளன என்று மருத்துவர் Xiao தெரிவித்துள்ளார்.

மூல உயிரணு முளையையோ அல்லது மரபணுவில் வேறுபாடு புகுத்தப்பட்ட மூல உயிரணுக்களையோ பயன்படுத்தி, நோய் தடுப்பு ஆற்றலை வளர்க்கலாம். மனிதரும், விலங்குகளும் நோயிலிருந்து தங்களை காத்துக்கொள்ளக்கூடிய தற்காப்பு நோய் தடுப்பு அமைப்புள்ளது. எனவே, தற்காப்பு நோய் தடுப்பு தொடர்பான பன்றியின் மரபணுக்களை மாற்றியமைத்து, மனிதனின் தற்காப்பு நோய் தடுப்பு அமைப்புக்கு ஏற்றதாக அவற்றின் உறுப்புகளை உருவாக்க முடியும். பன்றியின் உறுப்புகளை எடுத்து மனிதருக்கு பயன்படுத்த வேண்டுமென்றால், அவ்வாறு மனிதருக்கு உறுப்புகளை வழங்கும் நோக்கத்திற்காகவே சிறப்பான விதத்தில் பன்றிகள் வளர்க்கப்படலாம். அதன்மூலம் பன்றிகளின் புதிய உறுப்புகளை ஏற்கும்போது, நோயாளியின் தற்காப்பு நோய் தடுப்பு அமைப்பு ஏற்படுத்தும் எதிர்வினைகளை தூண்டாமல் இருக்க செய்ய முடியும்.

அடுத்தாக, பன்றியிலிருந்து உருவாக்கப்படும் பல ஆற்றலுடைய மூல உயிரணுக்களை பயன்படுத்தி, மனிதனின் மரபியல் தொடர்பான நோய்களுக்கு மாதிரிகளை உருவாக்கிட முடியும். மனிதருக்கு வரும் நீரிழிவு போன்ற பல நோய்கள் மரபணு சீர்குலைவினால் உருவாகின்றன. பன்றியின் மரபணுவை மூல உயிரணுவில் மாற்றியமைத்து மனிதரை போன்ற மரபணு சீர்குலைவை பன்றியும் பெறச்செய்ய வேண்டும். அவ்வாறு மரபணு சீர்குலைக்கப்பட்ட பன்றிகள், இத்தகைய சீர்குலைவிற்கு உள்ளான மனிதர்கள் கொண்டிருக்கும் நோய்க்கான அதே அறிகுறிகளை வெளிப்படுத்தும். இவ்வாறு உருவாக்கப்பட்ட மரபணு சீர்குலைக்கப்பட்ட பன்றியின் மாதிரியை வைத்துக்கொண்டு அந்த நோயை தடுப்பதற்கான மருத்துவ சிகிச்சைகளை ஆராயலாம்.

குறிப்பாக, பன்றியிலிருந்து பரவி பின்னர் மனிதர்களிடையே தொற்றுநோயாக தற்போது மாறியுள்ள எச்1என்1 நச்சுயிரியை தடுக்க, பன்றியின் குறிப்பிட்ட மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்தி, இந்த நோய்க்கு எதிரான விலங்கின் நோய் தடுப்பு ஆற்றலை அதிகரிக்க செய்ய முடியும். இதனை செயல்படுத்த சளிக்காய்ச்சல் எ நோய் உருவாக காரணமாக இருக்கின்ற எச்1என்1 நச்சுயிரியை தடுக்குகின்ற அல்லது எதிர்க்கின்ற மரபணுவை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். இந்த நோய் நச்சுயிரியை தடுக்கின்ற மரபணுவை, பல ஆற்றலுடைய மூல உயிரணுக்கள் மூலம் நாம் செலுத்தலாம். இதுவே மரபணு செலுத்தும் முறை எனப்படுகிறது. பொதுவாக, உயிரணுவின் சவ்வில் ஒட்டியிருக்கும் எச்1என்1 நச்சுயிரி, உயிரணுக்கள் பிரியும்போது பரவிவிடுகின்றது. ஆனால், பன்றியின் உயிரணுவில் செலுத்தப்பட்ட பல ஆற்றலுடைய மூல உயிரணுவால் எச்1என்1 நச்சுயிரி உயிரணுவின் சவ்வில் ஒட்டியிருப்பதை நீக்கிவிட முடியும். நச்சுயிரி ஓட்டியிருப்பது நீக்கப்பட்டுவிட்டால் அது பரவுவதற்கு வாய்ப்பேயில்லை. இவ்வாறு சளிக்காய்சச்ல் எ நோய் பரவுவதை முற்றிலும் தடுத்துவிடலாம். இந்த கண்டுபிடிப்பு விலங்கு பண்ணைகளை வளர்க்கவும் மிகவும் தேவைப்படும். பன்றிகளை மிகவும் நலமுடையதாக மட்டுமல்ல அவற்றின் வளர்ச்சி தொடர்பான மாபணுக்களை மாற்றிமைத்து பன்றி வளர்ப்பு முறைகளை முன்னேற்ற முடியும்.

இந்த ஆய்வால் உருவாகக்கூடிய மருத்துவ பயன்பாடுகளின் அனைத்து சோதனைகளும் முடிவுற்று மருத்துவமனைகளில் சிகிச்சைகளாக அறிமுகப்படுத்தப்பட, இன்னும் பல ஆண்டுகள் எடுக்கலாம். மேலும், மரபணு திருத்தப்பட்ட அல்லது மாற்றப்பட்ட பன்றிகளை பயன்படுத்தி மனிதருக்கு உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்வது, பன்றி வகைகளை பெருக்குவது, நோய் தடுப்பு முதலியவை தொடர்பான அடுத்த கட்ட ஆய்வு முயற்சிகள் தொடர இருக்கிறது. மரபணு மாற்றம் பெற்ற விலங்குகள் என்று எவற்றை குறிப்பிடலாம்? மரபணு செலுத்தும் முறை மூலம் மரபணு தொடர்புயைவை ஏதாவது விலங்குகளின் மரபணுத்தொடரில் செலுத்தப்பட்டிருந்தால் அவ்விலங்கு மரபணு மாற்றம் பெற்றதாக இருக்கும். மேலும், ஒரு விலங்கின் ஏதாவது மரபணுவின் செயல்பட்டை தடுக்க, மரபணு நீக்கும் முறை பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அந்த விலங்கு மரபணு மாற்றம் பெற்றதாக இருக்கும். எனவே மரபணு தொடர்பான ஏதாவது செலுத்தப்பட்டிருந்தாலோ அல்லது நீக்கப்பட்டிருந்தாலும் அவ்விலங்கை மரபணு மாற்றம் பெற்றதாக கொள்ளலாம்.

பன்றிகளால் பல்வேறு நன்மைகள் மனிதகுலத்திற்கு கிடைக்கும் வாய்ப்பை இந்த ஆய்வு வெளிபடுத்தியுள்ளது. மரபணு மாற்றப்பட்ட நெல் விதைகள், நெல் விளைச்சலில் மறுமலர்ச்சியை உருவாக்கி உலகின் ஏழ்மை ஒழிப்புக்கு பங்காற்றின. அதுபோல மரபணு மாற்றப்பட்ட விலங்குகள் மனிதகுல வாழ்வை மேம்படுத்தும்.