• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-16 15:40:45    
சீனாவின் மேற்கு பகுதி வளர்ச்சி உத்திநோக்கு பெற்ற சாதனைகள்

cri

கடந்த 10 ஆண்டுகளாக, சீன மேற்குப் பகுதியின் பொருளாதாரம், சமூகம், பண்பாடு மற்றும் உயிரின சுற்றுச்சுழல் கட்டுமானம், மாபெரும் சாதனைகளை பெற்றுள்ளது. இங்கு, பொருளாதாரம் மிக விரைவாக வளர்ந்துள்ளதோடு வளர்ச்சித் தரமும் சீரடைந்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற நிலைமை பெரிதும் மாற்றமடைந்து, மக்கள் மிக அதிக நலன் பெறுகின்ற கட்டத்தில் நுழைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு முதல், சர்வதேச நிதி நெருக்கடியின் பாதிப்பில், சீன பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்தது. ஆனால், மேற்குப் பகுதியின் பொருளாதார வளர்ச்சி குறையவில்லை. மேற்கு மாநிலங்கள், தொழில்களின் கட்டுக்கோப்பைச் சரிப்படுத்தி, நவீன மின்னணு வணிகம் முதலியவற்றின் மூலம் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களின் வளர்ச்சியை ஒருங்கிணைக்கின்றன.

சாங்து நகரத்தின் xin wenhua வணிகத் தொழில் நிறுவனம், இணையம் மூலம் தொழில் நடத்துகின்றது. அது, மாசுபாடில்லாத வேளாண் உற்பத்திப் பொருட்களையும் சிறப்பு உற்பத்திப் பொருட்களையும் பரப்புரை செய்கிறது. இணையதளம் இலட்சக்கணக்கான தொழில் நிறுவனங்களையும் வணிகர்களையும் இணைக்கிறது. இந்த நேரடியான வழிமுறை, வினியோக மற்றும் தேவை தரப்புகளின் வரவேற்பை பெற்றது. கடந்த ஆண்டு, இந்த இணையதளம் மூலம் நிறைவேறிய வேளாண் உற்பத்திப் பொருட்களின் வர்த்தகத் தொகை, 80 கோடி யுவானை எட்டியது. இவ்வாண்டின் முற்பாதியில், வர்த்தகத் தொகை 100 கோடி யுவானை தாண்டியது. இத்தொழில் நிறுவனத்தின் liu yantian கூறியதாவது,

இந்த இணையதளம், ஒரு இணையச் சந்தையாகும். இந்த மேடை மூலம், முழு நாட்டிலும் ஏன் உலகளவில் எங்களது வேளாண் உற்பத்தி பொருட்களை விற்க முடியும். இணையதளத்தைப் பயன்படுத்த முடியாதவர்கள், தகவல்களை எங்கள் நிறுவனத்திடம் வழங்கினால் நாங்கள் அவர்களின் சார்பில் வர்த்தகம் செய்கிறோம். விவசாயிகள் இணையதளத்தைப் பயன்படுத்துவது கடினம் முதலிய சிக்கல்கள் இந்த வழியில் தீர்க்கப்பட்டன என்று அவர் கூறினார்.

தவிரவும், சீன மேற்குப் பகுதி சர்வதேசப் பொருட்காட்சி, 2000ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. அது, மேற்குப் பகுதி வளர்ச்சிக்காக சீன அரசு சிறப்பாக நடத்திய வர்த்தகக் கூட்டமாகும். 10 ஆண்டுகால வளர்ச்சி மூலம், அது, மேற்கு பகுதி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கின்ற முக்கிய மேடையாக மாறியுள்ளது. இவ்வாண்டின் பொருட்காட்சியில், சீன தலைமையமைச்சர் வென்ச்சியாபாவும், கம்போடியா, இலங்கை, வியட்நாம், கென்யா முதலிய 6 நாடுகளின் தலைவர்களும் துவக்க விழாவில் கலந்து கொண்டனர். 88 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 50 ஆயிரத்திற்கு மேலான வணிகர்களும் விருந்தினர்களும் இப்பொருட்காட்சியில் கலந்து கொண்டனர்.

இப்பொருட்காட்சியில் கலந்து கொண்ட அயர்லாந்து வணிகர் Graham Mulhern கூறியதாவது,

தொழில்நிறுவனமொன்றை வாங்குவதே எனது சீன பயணத்தின் நோக்கமாகும். சீன தொழில்நிறுவனங்களில் உகந்த உற்பத்திப் பொருட்கள் இருந்தால், நான் அவற்றை பிரிட்டன் மற்றும் அயர்லாந்துக்கு அறிமுகம் செய்ய விரும்புகிறேன். ஒரு தொழில்நிறுவனத்துடன் ஒத்துழைப்புக்கான விருப்பம் தெரிவித்துள்ளேன் என்று அவர் கூறினார்.

தற்போது, சீன மேற்கு பகுதியின் சமூகப் பொருளாதாரம், சீரான வளர்ச்சிப் போக்கை நிலைநிறுத்துகிறது. ஆனால், நீணடகாலமாக நிலவும் கட்டுக்கோப்பு மற்றும் அமைப்பு முறைப் பிரச்சினைகள் தொடர்ந்து தெளிவாகவுள்ளன. எதிர்காலத்தில், நிதி, வரி, நிலம் முதலியவை பற்றிய கொள்கைகளை சீன அரசு மேம்படுத்தும். மேற்கு பகுதியின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு, மேலும் சீரான சந்தைச் சூழலை அது உருவாக்கும் என்று சீன தலைமையமைச்சர் வென்சியாபாவ் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,

அடுத்த ஆண்டின் ஜனவரி திங்கள், சீன அரசு மேற்குப் பகுதி வளர்ச்சி கொள்கையை நடைமுறைபடுத்திய 10ம் ஆண்டு நிறைவாகும். புதிய 10 ஆண்டுத் திட்டம் பற்றி சீனா ஆராய்ந்து வருகிறது. இந்தக் கொள்கையை செயலாக்கும் சீன அரசின் மனவுறுதி அசையாது. கொள்கை மாறாது. முயற்சி குறையாது. உள்நாட்டு வெளிநாட்டு திறமைசாலிகள் மேற்கு பகுதியில் முதலீடு செய்து தொழிலைத் துவக்குவதற்கு சீன அரசு வரவேற்பு தெரிவிக்கிறது. ஒளிமயமான எதிர்காலத்தை பெற வேண்டுமென சீனா விரும்புகிறது என்று வென்சியாபாவ் தெரிவித்தார்.


1 2