• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியைப் பார்வையிடுவது
  2010-04-27 09:54:08  cri எழுத்தின் அளவு:  A A A   

ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி டோனாட் சுன் 26ம் நாள் ஷாங்காய் மாநகருக்குச் சென்று 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியிலுள்ள ஹாங்காங் அரங்கைப் பார்வையிட்டார். இதற்கிடையில் "நகரின் சிறந்த நடைமுறை மண்டலம்"என்ற தலைப்பிலான ஹாங்கான் அரங்கிலும் சீன அரங்கிலும் அவர் பயணம் மேற்கொண்டார். சீன அரசுச் செய்தி ஊடகமான சின்குவா இதை அறிவித்தது.


நேற்று டோனாட் சுன் ஷாங்காய் மாநகராட்சித் தலைவர் ஹெச்சுனைச் சந்தித்து இருதரப்பும் அக்கறை கொண்ட நிகழ்ச்சிகள் பற்றி விவாதித்தார்.


ஷாங்காய் பயணத்தின் போது அவர் 27ம் நாள் ஷாங்காயை ஒட்டி அமைந்துள்ள ஜியாங் சூ மாநிலத்துக்குச் சென்று அம்மாநிலத்திலுள்ள வூ சி, நான்கிங், யாஞ்சோ, சூஷோ முதலிய நகரங்களில் பயணம் மேற்கொள்வார். பின் 30ம் நாளிரவு ஷாங்காய் மாநகரில் நடைபெறும் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் துவக்க விழாவில் கலந்து கொள்வார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040