19வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு விருந்தினர்களை வரவேற்க, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் அவரது மனைவி பேங் லீயுவானும்
வரவேற்பு விருந்தை வழங்கினர்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினர் லீ ஷி, செப்டம்பர் 18 முதல் 22ஆம் நாள் வரை பிரேசிலில் அதிகாரப்பூர்வ நட்புப் பயணம் மேற்கொண்டார்.
சீனத் துணை அரசுத் தலைவர் ஹான்செங், செப்டம்பர் 21ஆம் நாள், நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுப் பேரவையின் 78ஆவது கூட்டத்தொடரின் பொது விவாதத்தில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார்.
சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங்கின் அழைப்பை ஏற்று, நேபாளத் தலைமை அமைச்சர் பிரசண்டா செப்டம்பர் 23முதல் 30ஆம் நாள் வரை சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் செப்டம்பர் 21ஆம் நாள் கூறுகையில், கனடாவுக்கான இந்தியத் தூதரகப் பணியாளர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்கி இருப்பதால் 21ஆம் நாள் முதல், கனடிய குடிமக்களின் விசா சேவையை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் அடுத்த நாடாளுமன்ற கீழ் அவையின் தேர்தல் 2024ஆம் ஆண்டு ஜனவரியின் கடைசி வாரத்தில் நடைபெறவுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் 21ஆம் நாள் அறிவித்துள்ளது.
சீன ஊடகக் குழுமத் தலைவர் ஷென் ஹாய்ஷியொங் செப்டம்பர் 21ம் நாள் பெய்ஜிங்கில், ஹாங்ச்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக வந்தடைந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் துணை தலைவர் சாமரன்ச் தலைமையிலான குழுவினர்களைச் சந்தித்துரையாடினார்.
சீன வணிகத் துறை அமைச்சகம் 21ம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, வெளிநாடுகளில் சீனாவின் நிதியற்ற நேரடி முதலீட்டுத் தொகை, 58 ஆயிரத்து 561 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 18.8 விழுக்காடு அதிகரித்தது.
2023ம் ஆண்டின் உலக இணைய மாநாடு என்ற அமைப்பின் வூச்சேன் உச்சிமாநாடு, நவம்பர் 8ம் நாள் முதல் 10ம் நாள் வரை சீனாவின் வூச்சேன் என்ற வட்டத்தில் நடைபெறவுள்ளது என்று உலக இணைய மாநாடு செப்டம்பர் 21ம் நாள் அறிவித்தது.
கனடாவில் உள்ள இந்திய குடிமக்கள், இந்தியர்களுக்கு எதிராக பகைமை உண்டாக்கும் பகுதிகளுக்கு பயணம் செய்யாமல் தவிர்க்க வேண்டும் என்று இந்திய அரசு புதன்கிழமை அறிவுறுத்தியது.
ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் செப்டம்பர் 20ஆம் நாள் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் வெளிவிவகார ஆணைய அலுவலகத்தின் தலைவருமான வாங் யீயைச் சந்தித்துப் பேசினார்.
சொங்சின் மாநகரில் மேலும் அதிகமான விவசாயிகள் தானே பயிரிடப்பட்ட காய்கறிகளை நகரில் விற்பனைக்கு மூங்கில் கூடையை முதுகில் தூக்கி, சுரங்கப்பாதையில் பயணித்து சென்று வருகின்றனர்.
சீனச் சரக்கு மற்றும் போக்குவரத்து அமைச்சகத்திலிருந்து 19ஆம் நாள் கிடைத்த தகவலின் படி, சீனாவின் உள்நாட்டு துறைமுகங்களுக்குச் சர்வதேசப் பயணக் கப்பல் போக்குவரத்து முழுமையாக மீண்டும் தொடங்கப்படுகின்றது.
புதிய வளர்ச்சி நிலைமையை உருவாக்குவதற்குத் துணை புரியும் விதம், மேலும் உயர்நிலை புதிய திறப்பு பொருளாதார அமைப்பு முறையின் கட்டுமானத்தை சீனா முன்னெடுக்கும் என்று சீன அரசவையின் செய்தி அலுவலகம், 20ம் நாள் நடத்திய கொள்கைகள் குறித்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
2022ம் ஆண்டில் சீன எண்ணியல் பதிப்பகத் தொழிலின் மொத்த வருமானம், 1 இலட்சத்து 35 ஆயிரத்து 869.9 கோடி யுவானை எட்டி, முந்தைய ஆண்டில் இருந்ததை விட 6.46 விழுக்காடு அதிகரித்தது என்று 13வது சீன எண்ணியல் பதிப்பகப் பொருட்காட்சியில் தெரிவிக்கப்பட்டது.
நச்சு கழிவுப் பொருட்களைக் கையாள்வதில் மனித உரிமைக்குப் பாதிப்பு ஏற்படும் பிரச்சினைகள் குறித்த சிறப்பு பிரதிநிதிகளுடனான வரையாடலை ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் 54ஆவது கூட்டம் 19ஆம் நாள் நடத்தியது.
ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் பெண்கள் கிரிக்கெட் போட்டி 19ஆம் நாள் தொடங்கியது. இந்தோனேசிய மற்றும் மலேசிய அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறின.
மொத்தமாக 9 பெண்கள் கிரிக்கெட் அணிகள் ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியிட பங்கெடுத்துள்ளன.
கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர் லீ சி செப்டம்பர் 16ஆம் நாள் முதல் 18ஆம் நாள் வரை கியூபாவில் அரசு முறை நல்லெண்ணப் பயணம் மேற்கொண்டார்.
21ஆவது சீன-ஆசியான் பொருட்காட்சியும், சீன-ஆசியான் வர்த்தக மற்றும் முதலீட்டு உச்சி மாநாடும் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 23 முதல் 27ஆம் நாள் வரை நடைபெற உள்ளன.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை சர்வதேச ஒத்துழைப்பின் 3வது மன்றக் கூட்டம், வரும் அக்டோபர் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 19ம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
ரஷிய செய்தி நிறுவனம் 18ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் வேளாண் விளை பொருட்களுக்கான ஏற்றுமதி தடையை 2024 டிசம்பர் 31 தேதி வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க உத்தரவிட்டுள்ளார்.
செப்டம்பர் 18ஆம் நாளிரவு, சூடான் ஆயுதப் படை பெஜா பழங்குடியினப் பிரதேசத்திலுள்ள மக்கள் படைகளுடன் மோதல் நடந்து, துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது என்று உள்ளூர்வாசி ஒருவர் கூறினார்.
ஐந்து ஐரோப்பிய நாடுகளில் உக்ரைனின் நான்கு வேளாண் விளை பொருட்களின் தாராள வர்த்தகம் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை செப்டம்பர் 15ஆம் நாள் முடிவுக்கு வந்தது.
செப்டம்பர் 18ஆம் நாள் அமெரிக்க நிதி அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, அமெரிக்க அரசு கடன் தொகை 18ஆம் நாள் முதன்முறையாக 33 இலட்சம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியது.
லிபிய செய்தி ஊடகம் செப்டம்பர் 18ஆம் நாள் வெளியட்ட தகவலின்படி, அந்நாட்டின் டெர்னா நகரின் நாடாளுமன்றத்தை கலைக்கவும், விசாரணைக்கு ஒப்படைக்கவும், லிபிய தேசிய பேரவை நியமித்துள்ள தலைமையமைச்சர் ஓசாமா மஹத் அதே நாள் உத்தரவிட்டுள்ளார்.
15வது சீன-ஆசியான் நிதி ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி மன்றக் கூட்டம், 18ம் நாள் சீனாவின் நன்நிங் நகரில் நடைபெற்றது. அரசியல் மற்றும் நிதித் துறையைச் சேர்ந்த 300க்கும் அதிகமானோர் அதில் பங்கெடுத்து, சீன-ஆசியான் நிதி ஒத்துழைப்பு பற்றி விவாதித்தனர்.
சீன மாற்றுத்திறனாளி சம்மேளனத்தின் 8வது தேசிய மாநாடு 18ம் நாள் காலை, பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உள்ளிட்ட நாட்டின் தலைவர்கள் இத்துவக்க விழாவில் பங்கெடுத்தனர்.
19வது ஆசிய விளையாட்டுப் போட்டி செப்டம்பர் 23ஆம் நாள் முதல் அக்டோபர் 8ஆம் நாள் வரை சீனாவின் ஹாங்சோ மாநகரில் நடைபெறவுள்ளது. ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தலைமை செய்தி ஊடக மையம் செப்டம்பர் 18ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக இயங்கத் தொடங்கியுள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், மத்தியக் கமிட்டியின் வெளிவிவகார ஆணையப் பணியகத் தலைவருமான வாங்யீ, செப்டம்பர் 16ஆம் நாள் முதல் 17ஆம் நாள், மால்டாவில் அமெரிக்க அரசுத் தலைவரின் தேசிய பாதுகாப்பு விவகார ஆலோசகர் ஜேக் சல்லிவனுடன் பல சுற்று பேச்சுவார்த்தையை நடத்தினார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், மத்தியக் கமிட்டியின் வெளிவிவகார ஆணையப் பணியகத் தலைவருமான வாங்யீ, செப்டம்பர் 18ஆம் நாள் முதல் 21ஆம் நாள் வரை, ரஷியாவில் பயணம் மேற்கொண்டு, சீன-ரஷிய 18ஆவது சுற்று நெடுநோக்குப் பாதுகாப்பு கலந்தாய்வில் கலந்துகொள்ள உள்ளார்.
இவ்வாண்டு தற்போது வரை, வங்காள தேசத்தில் ஒரு லட்சத்து 64ஆயிரத்து 562 டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் பதிவு செய்யப்ட்டுள்ளன. உயிரிழப்பு எண்ணிக்கை 804ஐ எட்டியது
பாலஸ்தீனத்திலுள்ள பண்டைய ஜெரிகோ/டெல் எஸ்-சுல்தான் என்னும் வரலாற்று நினைவுச் சின்னம், உலக மரபு செல்வங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது.
சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் 17ஆம் நாள் 20வது சீனா-ஆசியான் பொருட்காட்சி, சீனா-ஆசியான் வணிக மற்றும் முதலீட்டு உச்சிமாநாடு ஆகியவற்றின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
ஈரானிலுள்ள சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் சரிபார்ப்புப் பணியாளர்களுக்கான நியமனத்தை நீக்க ஈரான் அண்மையில் அறிவித்தது. இச்செயல், ஈரானின் மீதான கண்காணிப்புத் திறனைக் கடுமையாகப் பாதிக்கும் என்று சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் 16ம் நாள் தெரிவித்தது.
பசுமை வளர்ச்சியில் சீனாவின் செயல்பாடு, மனிதருக்கும் இயற்கைக்குமிடையில் நல்லிணக்கத்தை நனவாக்கும் சீன நவீனமயமாக்கப் பாதை முதலியவை குறித்து, ஐ.நா சுற்றுச்சூழல் திட்ட அலுவலகச் செயல் தலைவர் அன்டர்சன் அம்மையார், சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்தார்.
2023ஆம் ஆண்டின் ஆகஸ்டு திங்கள் தேசிய பொருளாதாரச் செயல்பாட்டு நிலைமையைச் சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் 15ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டது.
லிபியாவின் செம்பிறைச் சங்கம் 14ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, சூறாவளி மற்றும் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட லிபியாவின் டெர்னா நகரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 300 ஆக உயர்ந்துள்ளது.
சூறாவளி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட லிபியாவிற்கு உதவ 20 இலட்சம் அமெரிக்க டாலர்களை அவசர நிவாரண தொகையை வழங்குவதாக உலகச் சுகாதார அமைப்பு 14ஆம் நாள் அறிவித்தது.
ஐரோப்பிய மத்திய வங்கி 14ஆம் நாள் நாணயக்கொள்கை கூட்டத்தை நடத்தியது. இதில், யூரோ பிரதேசத்திலுள்ள மூன்று முக்கிய வட்டி விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகளுடன் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதேச அமைதி மற்றும் நிலைத்தன்மையை அமெரிக்கா சீர்குலைப்பதை சீனா உறுதியுடன் எதிர்ப்பதாக சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
சீன-அமெரிக்க அரை மின் கடத்தி தொழிற்துறையின் பொருளாதார மற்றும் வர்த்தகப் பரிமாற்றத்தை வேண்டுமென்றே கட்டுப்படுத்துவது, வேறு நாடுகளின் நலன்களைச் சீர்குலைப்பதோடு, சொந்த நாட்டிற்கும் நன்மை தராது.
20வது சீன-ஆசியான் பொருட்காட்சி மற்றும் சீன-ஆசியான் வணிக மற்றும் முதலீட்டு உச்சிமாநாட்டின் துவக்க விழாவில் சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் செப்டம்பர் 17ஆம் நாள் பங்கெடுத்து உரை நிகழ்த்த உள்ளார்.
அமெரிக்க ஆப்பிள் பழங்கள் மீதான 20 சதவீத சுங்க வரியை குறைக்கும் நடவடிக்கை, இந்தியாவில் விளைவிக்கப்படும் ஆப்பிள்களின் விற்பனைக்கு பாதிப்பை ஏற்படுத்த போவதில்லை.
சூடான் பிரச்சினைக்குப் பொறுப்பான ஐ.நா தலைமைச்செயலாளரின் சிறப்புப் பிரதிநிதி வோல்கர் பெர்த்ஸ் உள்ளூர் நேரப்படி, செப்டம்பர் 13ஆம் நாள், ஐ.நா பாதுகாப்பவையில் சூடான் நிலைமை பற்றிய சுருக்கமான அறிக்கையை வழங்கினார்.
உலகளாவிய உணவுப் பாதுகாப்பு பிரச்சினை குறித்து ஐ.நாவின் உலக உணவுத் திட்ட அலுவலகம் அண்மையில் எச்சரித்துள்ளது. உணவு உதவியில் ஒவ்வொரு 1% குறைப்புக்கும், 4 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பசியின் விளிம்பிற்கு தள்ளப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைவரையும் உள்ளடக்கும் நிதித்துறையின் உயர்தர வளர்ச்சியை மேம்படுத்தும் விதம், சிறப்பு நிதி மேலாண்மை விதிமுறையின் திருத்தத்தை சீன நிதி அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது.
உள்ளூர் நேரப்படி 12ஆம் நாள் அல் அரேபியத் தொலைக்காட்சி நிலையம் வெளியிட்ட செய்தியின் படி, லிபியாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் 3,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஜோ பைடன் மீதான குற்றச்சாட்டு விசாரணையை தொடங்க வேண்டும் என்று அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரும், குடியரசு கட்சியின் உறுப்பினருமான கெவின் மக்கார்த்தி பிரதிநிதிகள் சபையின் தொடர்புடைய கமிட்டிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாதாக 12ஆம் நாள் தெரிவித்தார்.
அண்மையில், கதிர்வீச்சு பொருட்கள் கசிவு நிகழ்வு ஏற்பட்டது என்று ஜப்பானின் அணு ஆற்றல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த இப்ராகி மாவட்டத்தின் டோகாய் கிராமத்திலுள்ள அணு எரிபொருள் சுழற்சி பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.
ஐ.நா.வின் மனித உரிமைகள் மன்றத்தின் 54-ஆவது கூட்டத் தொடரில், இலங்கையின் மனித உரிமை நிலை பற்றிய ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர்களின் அறிக்கைக்கான பேச்சுவார்த்தை 11ஆம் நாள் நடைபெற்றது.
2023ஆம் ஆண்டில் கோடைகால பொருளாதார முன்னாய்வு அறிக்கையை ஐரோப்பிய ஆணையம் 11ஆம் நாள் வெளியிட்டது. இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோ பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சி முன்னாய்வைக் குறைப்பதாக முடிவு செய்துள்ளது.
கொரிய மத்திய செய்தி நிறுவனம் 12ஆம் நாள் வெளியிட்ட செய்தியின்படி, வட கொரியாவின் அதியுயர் தலைவர் கிம் ஜாங் உன் 10ஆம் நாள் பிற்பகல், தொடர்வண்டியின் மூலம், பியொங்யாங்கை விட்டுப் புறப்பட்டு, ரஷியாவுக்குச் சென்றார்.
இதற்கு முன்பு 600கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஈரானின் சொத்துகள் மீது தடை விதிக்கப்படும் என்ற கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்க பைடன் அரசு ஒப்புதல் அளித்துள்ளார்.
செப்டம்பர் 11ஆம் நாள், சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் அக்ஸு பகுதியிலுள்ள குச்சே நகரத்தில் தொழிலாளர்கள் பாரம்பரிய செம்மறி வால் பகுதியிலிருந்து கிடைபெறப்படும் கொழுப்பினால் சோப்பைத் தயாரித்தனர்.
கடந்த சில ஆண்டுகளில் குவாங்சி சுவான் இனத்தன்னாட்சிப் பிரதேசத்தின் ஹெசோ நகரத்தில் உள்ளூர் அரசு சேப்பங்கிழங்கின் தொழில் சங்கிலி வளர்ச்சிக்குப் பெரிதும் ஆதரவளித்து வருகின்றது. சந்தைக்கு வழங்கும் வகையில், கிராமவாசிகள் சுறுசுறுபாக வேலை செய்து வருகின்றனர்.
செப்டம்பர் 11ஆம் நாள், பெய்ஜிங்கிலுள்ள சுரங்க இருப்புப்பாதை நிலையத்தில் பாரம்பரிய சிறப்பியல்புடைய பீங்கான் பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட அழகான காட்சிகள்.
10லட்சம் டன் தானியங்களை ரஷியா துருக்கிக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையை இரு நாடுகள் உருவாக்கியுள்ளது என்று துருக்கி அரசுத் தலைவர் எர்டோகன் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, சீனாவின் புதிய எரியாற்றல் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை, முறையே 36.9 விழுக்காடு மற்றும் 39.2 விழுக்காடு அதிகரித்தன.
“கரிமத் தயாரிப்பு மூலம் புதிய உயிராற்றல்”என்ற தலைப்பில், 2023ம் ஆண்டின் ஷிச்சொங் ஆசிய கரிமத் தொழில் துறை புத்தாக்க வளர்ச்சி மாநாடு செப்டம்பர் 11ம் நாள் சிச்சுவான் மாநிலத்தின் நான்ச்சொங் மாவட்டத்தின் ஷிச்சொங் வட்டத்தில் துவங்கியது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியின் படி, ஐ.நா தலைமை செயலாளர் குட்ரேஸ், ஆகஸ்ட் 28ஆம் நாள் ரஷிய வெளியுறவு அமைச்சர் ராப்ரோபுக்கு செய்தி அனுப்பினார்.
சன்கே செய்தித்தாள் 11ஆம் நாள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, 7800 டன்னுள்ள ஃபுகுஷிமா அணு கத்திரியக்க நீரை வெளியேற்றும் முதலாவது கட்டத்தை டோக்கியோ மின்சார நிறுவனம் அதே நாள் நிறைவேற்றியுள்ளது.
நைஜரில் நிறுத்தப்பட்டுள்ள பிரஞ்சு படையைச் சரிப்படுத்த வேண்டுமானால், நைஜரில் சட்டத்தால் அங்கீகரிக்கப்படும் அரசுடன் விவாதிக்கலாம் என்றும், ஆட்சிக் கவிழ்ப்பை நடத்திய ராணுவப் படையினருடன் பிரான்ஸ் விவாதிக்கப்போவதில்லை என்றும், பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மேக்ரான் 10ஆம் நாள் புதுதில்லியில் தெரிவித்தாக பிரஞ்சு செய்தி ஊடகம் வெளியிட்டது.
ஜப்பான் ஒலிபரப்புக் சங்கம் வெளியிட்ட செய்தியன் படி, ஜப்பான் வெளியுறவு அமைச்சர் லின் ஃபாங்ஷெங் 9ஆம் நாள் கியேவில் திடீரென்று பயணம் மேற்கொண்டு, உக்ரைன் வெளியுறவு அமைச்சர் குலேபா மற்றும் அரசுத் தலைவர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருடன் முறையே பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.
செப்டம்பர் 10ஆம் நாள், சீனாவின் குய் ச்சோ மாநிலத்தின் ஜியன் துங்நன் மியாவ் மற்றும் துங் இனத் தன்னாட்சி சோவின் சென்குங் மாவட்டத்தில் விவசாயிகள் பேரிக்காய்களை அறுவடை செய்கின்றனர்.
சீனச் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சங்கம் 11ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, உள்நாட்டு தேவை விரிவாக்கம், வரி குறைப்பு, தனியார் நிறுவனங்கள் வளர்ச்சி மற்றும் மூலதனம் ஊக்குவிப்பு முதலியவை பற்றி தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சிக் கொள்கைகளை அமல்படுத்தியதன் மூலம் ஆகஸ்ட் மாதத்தில் சீனாவின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக் குறியீடு தொடர்ந்து மூன்றாவது மாதமாக உயர்ந்தது.
சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் செப்டம்பர் 10ஆம் நாள் இந்தியாவில் நடைபெற்ற 18ஆவது ஜி20 உச்சி மாநாட்டின் 3வது கட்டக் கூட்டத்தில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார்.
சீனத் தலைமை அமைச்சர் லீ ச்சியாங் செப்டம்பர் 9ஆம் நாள் முற்பகல் இந்தியாவின் புது தில்லியில் ஜி20 அமைப்பின் 18ஆவது உச்சிமாநாட்டின் முதல் கட்ட கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.
ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 8ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, ஆகஸ்ட் திங்களில், அரிசி, சர்க்கரை ஆகியவற்றைத் தவிர்த்த உணவுகளின் விலை குறைந்துள்ளது.
ஜெர்மன் கூட்டாட்சி புள்ளிவிவர அலுவலகம் செப்டம்பர் 6ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, ஜூலைத் திங்களில் ஜெர்மனியின் தொழில் துறையில் பெறப்பட்டுள்ள புதிய முன்பதிவுளின் எண்ணிக்கை ஜூன் திங்களை விட 11.7 விழுக்காடு குறைந்துள்ளது. இது 2020ஆம் ஆண்டின் மே திங்களுக்குப் பிந்தைய மிகப்பெரிய சரிவாகும்.
செப்டம்பர் 7ஆம் நாள் நடைபெற்ற கிழக்காசிய உச்சிமாநாட்டில், தைவான், தென் சீனக் கடல் முதலிய பிரச்சினைகள் குறித்து அமெரிக்கப் பிரதிநிதி ஒருவர் சீனா மீது காரணமின்றி குற்றச்சாட்டினார்.
குய்சோ மாநிலத்தின் பிஜெய் நகரின் நாயொ மாவட்டத்தில் மிளகாய் அமோகமாக அறுவடை ஆகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இம்மாவட்டம் விற்பனை வழிமுறைகளை விரிவாக்கி, பதனீட்டு அமைப்புமுறையை உருவாக்கியுள்ளது.
உள்ளூர் நேரப்படி 6ஆம் நாள் உக்ரைனின் தலைநகரான கியேவிவ்வில் பயணம் மேற்கொண்ட போது அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறுகையில், உக்ரைனுக்கு 100 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள புதிய உதவியை அமெரிக்கா வழங்கவுள்ளது என்றும் இதில் இராணுவ நோக்கங்களுக்காக 66.5 கோடி அமெரிக்க டாலர் பயன்படுத்தப்படும் என்றும் கூறினார்.
எரியாற்றல் மாற்றம் பற்றிய 2023ஆம் ஆண்டு சர்வதேச மன்றக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, 2022ஆம் ஆண்டில், உலகளவில் மிகப் பெரிய மின்சார வினியோக அமைப்புமுறை மற்றும் தூய்மையான மின் உற்பத்தி கட்டமைப்பை சீனா உருவாக்கியுள்ளது.
சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் 7ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, இவ்வாண்டின் முதல் 8 மாதங்களில், சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத் தொகை, 27 இலட்சத்து 8 ஆயிரம் கோடி யுவானாகும்.
செப்டம்பர் 6ஆம் நாள் ஷேன் டொங் மாநிலத்தின் பீசோ நகரில் 20 ஆயிரம் ஹெக்டர் குளிர்காலப் பேரீச்சப் பழங்கள் முறையே அறுவடை செய்யப்பட்டன. சந்தைக்கு வழங்கும் வகையில், உள்ளூர் விவசாயிகள் சுறுசுறுப்பாக அறுவடை செய்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளில், ஷேன் டொங் மாநிலத்தின் ழி ட்செள நகரில் பசலிப்பழம் உள்ளிட்ட உயர் தரச் சிறப்புப்பழங்களை வளர்ப்பதன் மூலம் உள்ளூர் விவசாயிகளின் வருமானம் அதிகரித்து வருகின்றது. இப்போது அவர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்து வருகின்றனர்.
ஆகஸ்டு 27ஆம் நாள் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஹமி நகரிலுள்ள ஏரி தாதுகள் இருந்த நீர் காரணமாக இளஞ்சிவப்பு ரோஜா போன்று கண்கொள்ளா காட்சியளிக்கின்றது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ செப்டம்பர் 6ஆம் நாள் பெய்ஜிங்கில் கிரெநாடா வெளியுறவு அமைச்சர் ஆண்டரைச் சந்தித்துப் பேசினார்.
பிரிட்டனின் 2ஆவது பெரிய நகரமான பர்மிங்காம் திவாலான நிலையில் உள்ளது என்று செப்டம்பர் 5ஆம் நாள் இந்நகரம் அறிவித்துள்ளது. நலிந்தோருக்கான பாதுகாப்பு முதலிய சட்ட ரீதியான சேவைகளைத் தவிர்த்து, அனைத்து புதிய செலவுகளையும் இந்நகரம் நிறுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் உலக வர்த்தக அமைப்பிடம் ஆவணம் ஒன்று ஒப்படைத்துள்ளது. ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் அணு கத்தியக்க நீரை ஜப்பான் வெளியேற்றிய பிறகு, ஜப்பானின் நீர் வாழ் உயிரினங்களுக்கான இறக்குமதியை சீனா தடை செய்வது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஜப்பானின் வெளியுறவு அமைச்சகம் 4ஆம் நாள் தெரிவித்தது.
இஸ்ரேல் தலைமையமைச்சர் பெஞ்சமின் நெதன்யாகு, சைப்ரஸ் அரசுத் தலைவர் கிறிஸ்டோ ஜூலிட்ஸ், கிரேக்க தலைமையமைச்சர் மிசோடாகிஸ் ஆகியோர் சைப்ரஸின் தலைநகரான நிக்கோசியாவில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
இரு நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம், அரசியல் மற்றும் மானிடவியல் துறைகளிலான ஒத்துழைப்புகள் குறித்தும், கருங்கடல் துறைமுக வேளாண் பொருட்கள் போக்குவரத்து ஒப்பந்தம் உள்ளிட்ட சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ 4ஆம் நாள் பெய்ஜிங்கில் இத்தாலி துணை தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான அன்டோனியோ தயானியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
செப்டம்பர் வரை, சுமார் 2லட்சமான இலங்கை மக்கள் வெளிநாட்டில் வேலை செய்ய அந்நாட்டின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து இலங்கையை விட்டுச் சென்றுள்ளனர்.
உக்ரைனின் அரசு சொத்து நிதியத்தின் தலைவரான ரஸ்டம் உமெரோவ் என்பவர் புதிய பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்பதாகவும் அந்நாட்டின் அரசுத் தலைவர் ஜெலென்ஸ்கி 3ஆம் நாள் தெரிவித்தார்.
சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங், செப்டம்பர் 9ஆம் நாள் முதல் 10ஆம் நாள் வரை, புதுதில்லியில் நடைபெறவுள்ள ஜி 20 நாடுகள் குழு தலைவர்களின் 18ஆவது உச்சிமாநாட்டில் பங்கெடுக்க உள்ளார்.
சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பின் முக்கிய மேடை, ஜி 20 நாடுகள் குழுவின் புது தில்லி உச்சி மாநாடு, இது குறித்து கருத்து ஒற்றுமையை எட்டி, நம்பிக்கையை வெளியிட வேண்டும் என்று சீனா விரும்புகின்றது.
இஸ்ரேல் முதலுதவி அமைப்பு மற்றும் காவற்துறை வட்டாரம் வெளியிட்ட செய்தியின் படி, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் எரித்திரிய அகதிகளுக்கும் காவற்துறைக்குமிடையிலான பெரிய அளவிலான மோதல் நிகழ்ந்தது. இதில் சுமார் 160 பேர் காயமடைந்தனர். அவர்களில் 15 பேர் பலத்த காயமடைந்தனர்.
சிங்கப்பூர் அரசுத் தலைவர் தேர்தலில் சிதர்மன் சண்முகரத்னம் 70.40 விழுக்காட்டு ஆதரவு வாக்குகளுடன் வென்று அந்நாட்டின் 9ஆவது அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று 2ஆம் நாள் வெளியான முடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்த போர் மற்றும் உலக மக்கள் பாசிசவாதத்தை எதிர்த்த போரின் வெற்றியின் 78வது ஆண்டு நிறைவை நினைவு கூரும் கலந்துரையாடல் கூட்டம் 3ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
2023ஆம் ஆண்டு சீனச் சர்வதேச சேவை வர்த்தகக் கண்காட்சியின் உலக சேவை வர்த்தக மாநாடு செப்டம்பர் 2ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. இதில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் காணொளி வழியாக உரை நிகழ்த்தினார்.
செப்டம்பர் 2ஆம் நாள் தென்கொரியாவின் சுற்றுச்சூழல் சம்மேளனங்கள், மீன் பிடிப்பவர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேலானோர் சியோல் நகரில் ஒன்றில் கூடி, கதிரியக்க நீரை கடலில் வெளியேற்றி வரும் ஜப்பானுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
வெளிநாட்டிலிருந்து திரும்பும் சீனர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களின் பிரதிநிதிகளின் 11ஆவது கூட்டமைப்பு ஆகஸ்ட் 31ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி ஆகஸ்ட் 31ஆம் நாள் நடத்திய கூட்டத்தில், அதிகாரிகளுக்கான கல்வி மற்றும் பயிற்சி பணி பற்றிய விதிகள், தேசிய அதிகாரிகளுக்கான கல்வி மற்றும் பயிற்சி திட்டம் பற்றி பரிசீலனை செய்யப்பட்டன. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளர் ஷி ச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
ஃபுகுஷிமா அணு மின் நிலையமத்தின் கதிரியக்க நீரைக் கடலுக்குள் வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதம், ஜப்பானிய தலைமை அமைச்சர் ஃபுமியோ கிஷிடா மற்றும் டோக்கியோ மின்சார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டோமோகி கோபயாகவா மீது கடிதத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வணிக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சு யூடிங் அம்மையார் கலந்து கொண்டு அண்மையில் சீனாவில் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அமைச்சரின் பயணம் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள், இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்த நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்தை எதிரொலிக்கின்றன.
பிரிட்டனின் தேசியப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த பென் வாலஸ் அப்பதவியில் இருந்து விலகியதை அடுத்து பிரிட்டனின் எரியாற்றல் பாதுகாப்பு அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார் என்று பிரிட்டன் அரசு ஆகஸ்ட் 31ஆம் நாள் அறிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி ஆகஸ்ட் 30ஆம் நாள், ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளம் வெளியிட்ட அறிக்கை ஒன்றின்படி, ரஷ்ய அரசுத் தலைவர் புதின் வழங்கியுள்ள முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த ரஷ்யாவும் துருக்கியும் முயன்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தரப்பு, சீன அதிகாரிகள் மீது சட்ட விரோதமாக தடை விதித்த செயல், சீனாவின் உள்விவகாரத்தில் கடுமையாக தலையிட்டு, சீனாவின் நலன்களையும் சீர்குலைத்துள்ளது.
ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் காபொன் தேர்தலுக்குப் பிறகான நெருக்கடியைத் தீர்க்கும் முயற்சியை ஐ.நா தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரெஸ் ஆகஸ்டு 30ஆம் நாள் செய்தித் தொடர்பாளரின் மூலம் வெளியிட்ட அறிக்கையில் கண்டித்தார்.
சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 7 திங்கள்காலத்தில், சீனாவின் மென்பொருள் மற்றும் தகவல் தொழில் நுட்பச் சேவைத் துறை நிதானமாக இயங்கி வருகிறது.
அமெரிக்க வணிக அமைச்சகம் 30ஆம் நாள் வெளியிட்ட திருத்த புள்ளிவிவரங்களின் படி, அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஆண்டுக்கு 2.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது, முதற்கட்டத்தில் வெளியான புள்ளிவிவரத்தை விட, 0.3 புள்ளிகள் குறைக்கப்பட்டது.
சீனத் துணை அரசுத் தலைவர் ஹான் ட்சேங் ஆகஸ்ட் 30ஆம் நாள் பெய்ஜிங்கில், பிரிட்டன் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் வளர்ச்சி விவகாரங்களுக்கான அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லியுடன் சந்திப்பு நடத்தினார்.
ஒன்றுக்கு ஒன்று உறுதியாக ஆதரவளிக்கவும், நடைமுறை ஒத்துழைப்பை ஆழமாக்கவும், நாகரிகப் பரிமாற்றத்தை மேம்படுத்தவும் அரபு நாடுகளுடன் இணைந்து செயல்பட சீனா விரும்புகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் பசுமை வர்த்தக அளவு ஆண்டுக்கு சராசரியாக 3.18 விழுக்காடு வளர்ச்சியுடன், உலகளவில் வகிக்கும் பங்கு 2.3 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளது.
அண்மையில், தென் கொரியா, வியட்நாம், ரஷியா, பிரிட்டன், சிரியா, தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த இணைய இன்ஃப்ளூயன்சர்கள் சீன ஸிச்சுவான் மாநிலத்தின் அபா சோவிலுள்ள ரௌயர்கை வட்டத்தின் திபெத்திய மருத்துவமனையில் பார்வையிட்டு திபெத்திய மருத்துவத்தை அனுபவித்து கேட்டறிந்தனர்.
பாகிஸ்தானின் முன்னாள் தலைமையமைச்சர் இம்ரான் கான் மீதான கொலைக் குற்றச்சாட்டை அந்நாட்டின் பலூசிஸ்தான் மாநிலத்தின் உயர் நீதிமன்றம் உள்ளூர் நேரப்படி ஆகஸ்ட் திங்கள் 28ஆம் நாள் நிராகரித்துள்ளதாக பாகிஸ்தான் செய்திஊடகம் செய்தி வெளியிட்டது.
2020ஆம் ஆண்டின் அமெரிக்கத் தேர்தலில், முன்னாள் அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் தலையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு வழக்கில் 2024ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 4ஆம் நாள் தீர்ப்பு அளிக்கும் என்று அமெரிக்காவின் வாஷிங்டன் மாவட்டத்தின் கூட்டாட்சி நீதி மன்றத்தின் நீதிபதி டன்யா சுட்கன், உள்ளூர் நேரப்படி ஆகஸ்ட் 28ஆம் நாள் தீர்மானிதுள்ளார்.
ஏ.ஐ.தொழில் நுட்பத்தை முற்றிலும் பயன்படுத்தி ஆய்வறிக்கையை உருவாக்குபவர், உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு வரையறுக்கப்படும் சட்ட பொறுப்புகள் இச்சட்ட முன்வரைவில் விதிக்கப்படுகின்றன.
சீனத் தேசிய வெள்ளத்தடுப்புத் தலைமையகமும், சீன அவசர நிலை மேலாண்மை அமைச்சகமும் 28ஆம் நாள், சீன வானிலைப் பணியகம், சீன நீர்வள அமைச்சகம், சீன இயற்கை மூலவள அமைச்சகம் முதலியவற்றுடன் இணைந்து நடத்திய கூட்டத்தில், தற்போதைய வெள்ளம், வறட்சி, சூறாவளி உள்ளிட்டவையின் நிலைமை மற்றும் அவற்றின் வளர்ச்சி முன்னேற்றப் போக்கு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
கிரெம்ளின் மாளிகை இணையத்தளம் 28ஆம் நாள் வெளியிட்ட தகவல்களின்படி, ரஷிய அரசுத் தலைவர் புதின், அதே நாள், இந்திய தலைமையமைச்சர் மோடியுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டுள்ளார்.
2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் நாள் முதல், சீனாவுக்கு வருபவர்கள் எல்லை நுழைவுக்கு முன் நியூக்ளிக் அமில சோதனை அல்லது ஆன்டிஜென் சோதனை மேற்கொள்ளத் தேவையில்லை.
இவ்வாண்டின் முதல் 7 மாதங்களில், சீனாவில் ஆண்டுக்கு 2கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில்துறை நிறுவனங்களின் இயக்க வருமானம் 73.22 டிரில்லியன் யுவானை எட்டியது.
இவ்வாண்டின் ஜனவரித் திங்கள் முதல் ஜூலைத் திங்கள் வரை, சீன வீட்டுப்பயன்பாட்டு மின் சாதனத் தொழில் துறையின் அதிகரிப்பு விகிதம், கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 8.9 விழுக்காடு அதிகரித்துள்ளது.
பிரிட்டனில் காணப்பபடும் உயர் பணவீக்கத்தை எதிர்க்கும் வகையில், பிரிட்டன் ரயில்வேயின் சுமார் 20 ஆயிரம் ஊழியர்கள், உள்ளூர் நேரப்படி 26ஆம் நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
வரி மற்றும் கட்டணங்களைக் குறைப்பது, நிதி கொள்கை ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது, ஒதுக்கீட்டு வழிகாட்டின் பங்கை வெளிக்காட்டுவது முதலிய துறைகளில் நிதி மற்றும் வரி ஆதரவு கொள்கைகளின் செயலாக்கத்தை முன்னேற்றி, நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களின் உயர்தர வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும்.
சீன அரசவை செய்தி அலுவலகம் வெளியிட்ட செய்தியின் படி, 20ஆவது சீன-ஆசியான் பொருட்காட்சி செப்டம்பர் 16 முதல் 19ஆம் நாள் வரை சீனாவின் குவாங் சீ ச்சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் நன் நீங் நகரில் நடைபெறவுள்ளது.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பினரும், சீன-இந்திய உறவு மற்றும் பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்து, கருத்துகளை ஆழமாகப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.
சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் ஆகஸ்ட் 24ஆம் நாள் வெளியிட்ட தகவல்களின்படி, கடந்த 10 ஆண்டுகாலத்தில், 152 நாடுகள், 32 சர்வதேச அமைப்புகள் முதலியவற்றுடன் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்மொழிவுக்கான 200 ஒத்துழைப்பு ஆவணங்களில் சீனா கையொப்பமிட்டுள்ளது.
காட்ஸில்லா (Godzilla) என்ற ஜப்பானின் மான்ஸ்டர் இன்று பிறக்கும் வாய்ப்பு இருக்கா?ஜப்பான் அரசு ஆக்ஸ்ட் 24ஆம் நாள் கடலில் அணு கழிவு நீரை வெளியேற்றத் தொடங்கியது.
ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் அமைப்பின் 15ஆவது உச்சி மாநாட்டிற்கான சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பங்கேற்றார்.
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் தென்னாப்பிரிக்காவில் அரசுப் பயணம் மேற்கொண்ட போது, உள்ளூர் நேரப்படி, ஆகஸ்ட் 23ஆம் நாள், சீன ஊடகக் குழுமமும் தென்னாப்பிரிக்க ஒளிபரப்பு நிறுவனமும் கூட்டாக ஆவணப் படம் ஒன்றை எடுப்பதாக அறிவித்துள்ளன.
ஜப்பானின் நீர் வாழ் உயிரினங்களை இறக்குமதி செய்யத் தற்காலிகத் தடை விதிக்கும் அறிக்கை ஒன்றை சீன சுங்கத் துறை தலைமைப் பணியகம் ஆகஸ்ட் 24ஆம் நாள் வெளியிட்டுள்ளது.
சர்வதேசச் சமூகத்தின் வலுவான சந்தேகங்கள் மற்றும் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், ஃபுகுஷிமா அணு உலை விபத்தில் மாசுபட்ட நீரை கடலில் வெளியேற்றும் திட்டத்தை ஜப்பான் அரசு ஆகஸ்ட் 24ஆம் நாள் ஒருசார்பாக தெடங்கியது.
தற்போதைய சர்வதேசப் பொருளாதார மீட்சியானது பெரும் சவால்களை எதிர்கொண்டு வரும் பின்னணியில், பிரிக்ஸ் நாடுகள் ஆழமான ஒத்துழைப்பை மேற்கொண்டு பொருளாதார வளர்ச்சியை நிலைப்படுத்துவதோடு அதன் வளர்ச்சியை முடுக்கிவிட்டு உலகச் சந்தையின் நிலைத்தன்மைக்குரிய உந்து ஆற்றலை அளித்து வருகின்றன.
ரஷியக் கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிறுவனம் 23 ஆம் நாளிரவு வெளியிட்ட செய்தியின் படி, வாக்னர் ஆயுதப்படையின் நிறுவனர் யெவ்கெனி பிரிகோஜின் அன்று நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.
செயற்கைக்கோளுக்கு எதிராக ஏவப்படும ஏவுகணை சோதனைக்குத் தடை விதிப்பது குறித்து, அமெரிக்கா முன்வைத்த வாக்குறுதியில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அனைத்தும் சேர்வதாக அறிவிக்கப்பட்டது.
அண்மையில், பல ஐரோப்பிய நாடுகள் அதிக வெப்பநிலை மற்றும் அதிக மழை குறித்த எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. அடுத்த சில நாட்களில் பிரான்சின் தெற்குப் பகுதியின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸைத் தாண்டும்.
ஆகஸ்டு 22ஆம் நாள் குய் சோ மாநிலத்தில் உள்ள மியாவ் மற்றும் துங் இனத் தன்னாட்சி மாவட்டத்தில் மிளகாய் மற்றும் தக்காளிப்பழங்கள் ஆகியவை கொண்டு தயாரிக்கப்பட்ட பண்டைய மிளகாய் பேஸ்ட் காய்ச்சும் காலத்திற்குள் நுழைகிறது.
இலங்கை அரசுத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அந்நாட்டு தலைவர்களைச் சந்தித்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு குறித்து அவர்களுடன் விவாதம் நடத்தியுள்ளார்.
சீன வணிகத் துறை அமைச்சர் வாங் வெனின் அழைப்பை ஏற்று, அமெரிக்க வணிகத் துறை அமைச்சர் ஜினா ரேமொன்டோ, ஆக்ஸ்ட் 27ம் நாள் முதல் 30ம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
கம்போடியாவின் புதிய தலைமையமைச்சராக ஹன் மானைத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் 22ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்தது. அத்துடன் புதிய அமைச்சரவைப் பட்டியனுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மத்திய அமெரிக்க கண்டத்தின் நாடாளுமன்றம், தைவான் பிரதேசத்தின் "சட்டமியற்றல் குழு" மற்றும் "நிரந்தர பார்வையாளர்" தகுநிலையை ரத்து செய்யும் தீர்மானத்தை அங்கீகரித்தது.
பிரிட்டன், தென்கொரியா, ரஷியா, வியட்நாம் முதலிய நாடுகளைச் சேர்ந்த இணைய பிரமுகர்கள், சீன ஊடகக் குழுமத்தின் அழைப்பை ஏற்று, ராட்சத பாண்டா பாதுகாப்பு மற்றும் ஆய்வு மையத்தில் பயணம் மேற்கொண்டனர்.
கடந்த 70 ஆண்டுகளில் சிச்சுவான் மாநிலத்தின் ஆபா திபெத் மற்றும் ஜியாங் தன்னாட்சிச் சோவில் நடைபெற்ற மாபெரும் மாற்றங்களை வெளிக்காட்டும் நடவடிக்கை, ஆக்ஸ்ட் 20ம் நாள் துவங்கியது.
19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியை வரவேற்கும் வகையில், ட்சேஜியாங் மாநிலத்தில் ச்சின்குவா நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான சிறப்பு மின்சார சுரங்க ரயில் அதிகாரப்பூர்வமாக இயங்கத் தொடங்கியுள்ளது.
சீனா, தென்னாப்பிரிக்காவுக்கு மிகப் பெரிய ஒற்றை நிலை வர்த்தக கூட்டாளியாகத் திகழ்கிறது என்று தென்னாப்பிரிக்காவுக்கான பிரிக்ஸ் வணிக கவுன்சில் தலைவர் புசி மபுஸா சி.ஜி.டி.என் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தபோது தெரிவித்தார்.
பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களிடையே 15ஆவது உச்சி மாநாடு விரைவில் தென்னாப்பிரிக்காவில் துவங்குகிறது. இதில் பிரிக்ஸ் அமைப்பின் விரிவாக்கம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும்.
அண்மையில் சீனாவின் தைவான் பகுதியின் துணைத் தலைவர் லாய் சிங்தே ப்ளூம்பர்க் செய்தி நிறுவனத்திற்குஅளித்த பேட்டியில், தைவான் சுதந்திரம் பற்றிய அபத்தமான பேச்சைப் பரப்பினார்.
புதிய புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் ஜனவரி முதல் ஜூலை வரை, சீனாவின் கப்பல் கட்டும் தொழிற்துறையின் மூன்று முக்கிய குறியீடுகள் உலகில் முதலிடத்தில் இருந்து, தொடர்ந்து உலகை வழிநடத்துகிறது.
ரஷியத் தேசிய விண்வெளி குழுமம் 20ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, ரஷியாவின் லூனா-25 எனும் விண்கலம் திட்டமிட்ட சுற்று வட்டப் பாதையில் இருந்து விலகிச் சென்றால், சந்திரனின் தரைபரப்பில் விழுந்து நொறுங்கியது.
கடந்த சில ஆண்டுகளில், உலகளவில் பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு முறைமையின் செல்வாக்கு அதிகரித்து வருவதுடன், இம்முறைமையில் சேர, பல நாடுகள் விண்ணப்பித்துள்ளன.
பாகிஸ்தான் வாஜிரிஸ்தான் பகுதியில், தொழிலாளர்களுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றின் மீது 19ஆம் நாளிரவு நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.
தென்னாப்பிரிக்க நாடாளுமன்றக் கீழவையின் துணைத் தலைவர் செனொலி, 19ஆம் நாள் கேப்டவுன் நகரில், சீன ஊடகக் குழுமத் தலைவர் ஷென்ஹாய்ஷியுங் உள்ளிட்டோரைச் சந்தித்தார்.
அமெரிக்க ஹவாய் மாநிலத்தைச் சேர்ந்த மாவ்யி தீவில் ஆக்ஸ்ட் 8ஆம் நாள் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில், தற்போதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 114ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாண்டு அமெரிக்காவில் வீடற்றோரின் எண்ணிக்கை, தற்போது வரை 11 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அதிகரிப்பாகும்.
பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் சந்திப்பில் பங்கெடுக்கும் பல்வேறு தரப்பினர், தற்போதைய சர்வதேச சூழ்நிலையில் முனைப்பான சவால்கள் குறித்து, ஆழ்ந்த முறையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உள்ளனர்.