• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
18வது குன்மிங் பொருட்காட்சி
  2010-06-06 19:03:32  cri எழுத்தின் அளவு:  A A A   

18வது குன்மிங் ஏற்றுமதி இறக்குமதி பொருட்காட்சி மற்றும் 3வது தெற்காசிய வணிகப் பொருட்காட்சி 6ஆம் நாள் யுன் நான் மாநிலத்தின் குன்மிங் நகரில் அதிகாரப்பூர்வமாக துவங்கியது.

ஆசியான் மற்றும் தெற்காசிய நாடுகளுடன் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு சீனா மேற்கொள்ளும் முக்கிய மேடைகளில் ஒன்றாக, குன்மிங் பொருட்காட்சி மற்றும் தெற்காசிய வணிகப் பொருட்காட்சியின் செல்வாக்கு விரிவாகி வருகிறது. இப்பொருட்காட்சியில் காட்சி அரங்குகளின் எண்ணிக்கை 2400ஐ தாண்டியுள்ளது. இதில் கலந்து கொண்ட தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2300க்கு மேலாகும். சுமார் 20000 வெளிநாட்டு வணிகர்கள் உள்ளிட்ட 50000 வணிகர்கள் இதில் கலந்து கொள்கின்றனர் என மதிப்பிடப்படுகிறது. மேலும், இப்பொருட்காட்சிக் காலத்தில், சீன இளம் தொழில் முனைவோரின் குன்மிங் நடவடிக்கை நாள், பெரும் மெகோங் ஆற்று துணை மண்டலத்தின் 2010 பொருளாதார மற்றும் வர்த்தகம் பற்றிய பரப்புரை முதலிய நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040