ஜுன் முதல் நாள் சர்வதேச குழந்தைகள் நாளின் போது, மங்கோலிய இனத் தனிச்சிறப்புடைய குழந்தைகள் பாடல் குழு ஒன்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் பூங்காவில் இசை நிகழ்ச்சி அரங்கேற்றியது. வண்ணத்து ஹுலன்பெல் என்பது அந்த குழுவின் பெயராகும். சீனாவில் சிறுப்பான்மை தேசிய இன குழந்தைகளால் மட்டும் உருவாக்கப்பட்ட முதலாவது குழந்தைகள் பாடல் குழு இதுவாகும். அக்குழுவின் குழந்தைகள் பற்றி அறிய வாருங்கள்.
உலகப் பொருட்காட்சி என்பது எங்கள் சிறப்பை வெளிப்படுத்தும் ஒரு பெரிய அரங்காகும்.
அதன் மூலம் எங்கள் தேசிய இனத்தின் இனிமையான பாடல்களை உலகிற்கு அறிமுகப்படுத்தி பரவல் செய்ய விரும்புகின்றோம். ஷாங்காய் மாநகரிலிருந்து எமது குடும்பத்தினருக்கு அழகான அன்பளிப்புகளை வாங்குவோம்.
அவர்கள் தான் வண்ணத்து ஹுலன்பெல் பாடல் குழுவைச் சேர்ந்த குழுந்தைகளாவர். இந்தப் பாடல் குழு 2007ம் ஆண்டில் நிறுவப்பட்டது. Oroqen இனம், Ewenki இனம் , Daurஇனம் மற்றும் மங்கோலிய இனத்தின் புலியாட், பால்ஹு ஆகிய இரண்டு பழங்குடி இனங்களைச் சேர்ந்த 5 முதல் 12 வயது வரையான 42 குழந்தைகள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
அவர்களின் வீடுகள் மிகப் பரந்த ஹுலன்பெல் புல்வெளியில் அமைந்துள்ளன. அங்கு ஆடு, மாடுகளின் கூட்டங்கள், பாய்ந்து வரும் குதிரைகள், வெள்ளை நிற மங்கோலிய கூடாரங்கள் உள்ளன. அங்குள்ள ஆண் குழந்தைகள் குதிரைகளில் சமாரி செய்தி கொண்டே பாடல்களை பாட விரும்புகின்றனர். பெண் குழந்தைகள் அழகான ஆடைகளை அணிந்து புல்வெளியில் ஆட விரும்புகின்றனர். தற்போது, புல்வெளியின் ஆடல்களையும் பாடல்களையும் உலகப் பொருட்காட்சி மூலம் உலகிற்கு அறிமுகப்படுத்தி பரவல் செய்வது இந்தக் குழந்தைகளின் விருப்பமாகியுள்ளது. அதற்காக அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வண்ணத்து ஹுலன்பெல் பாடல் குழுவின் தலைமை ஆசிரியர் லினா அம்மையார் கூறியதாவது
மே திங்கள் 8ம் நாள் முதல் ஒட்டுமொத்தப் பயிற்சிகளை மேற்கொள்ள துவங்கினோம். நாள்தோறும் காலை 8 முதல் 11:30 மணி வரை, பிற்பகல், 1:30 மணி தொடங்கி பயிற்சி செய்தோம். சில வேளைகளில் இரவிலும் பயிற்சி மேற்கொண்டோம். 20க்கு மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை அரங்கேற்ற வேண்டும். நிகழ்ச்சிகளுக்கிடையில் குழந்தைகள் ஆடைகளை மாற்ற வேண்டும். ஒருவர் குறைந்தது 3 ஆடைகளை மாற்ற வேண்டியுள்ளது. இதற்கு ஏற்றபடி சுறுசுறுப்பாக பயிற்சிகள் மேற்கொண்டோம் என்று அவர் கூறினார்.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் இசை நிகழ்ச்சி அரங்கேற்ற 2009ம் ஆண்டின் இறுதி முதல் இந்தப் பாடல் குழு ஆயத்தம் செய்ய துவங்கியது. குடும்பம் என்ற தலைப்பு பற்றி சொந்த ஊரைப் பாராட்டும் இனிமையான புல்வெளி நாட்டுப்புறப் பாடல்களை இது தேர்ந்தெடுத்தது. ஆடல் அபிநயங்களும் அசைவுகளும் பல முறை மேம்படுத்தப்பட்டன. குழந்தைகள் அனைவரும் பயிற்சியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டனர்.
மிகவும் களைப்பாக உள்ளது. நேற்றைய பயிற்சிக்குப்பின், நிற்க கூட முடியவில்லை. ஆனாலும், நான் பயிற்சியைக் கைவிடவில்லை. இன்று பரவாயில்லை என்று ஒரு குழந்தை கூறினார்.
சுறுசுறுப்பான பயிற்சியின்போது குழந்தைகள் காட்டும் நகைச்சுவைகளையும் பார்க்க முடிகிறது.
மகிழ்ச்சி அடைகின்றோம். நேற்று பயிற்சி மேற்கொண்ட போது, கடைசியில் திரை விழுந்த போது, எனது பக்கத்தில் நின்றவர் நின்றார் என்னை தொட்டுகூட்டமடைய செய்தார். பிறகு நாங்கள் விளையாடினோம். சுவையாக இருந்தது. ஆனால், உண்மையான அரங்கேற்றத்தில் இவ்வாறு விளையாட மாட்டோம் என்று மற்றொரு குழந்தை கூறினார்.
மங்கோலிய நாட்டைச் சேர்ந்த Batubaoli என்ற குழந்தை இசை கல்வியில் சிறந்த அறிவுடையவர். உலகப் பொருட்காட்சியின் கலை நிகழ்ச்சிகளுக்கு அவர் இசை வழிகாட்டியாக சிறப்பாக செயல்படுகின்றார். அவர் கூறியதாவது
இந்தக் குழந்தைகள் இசை துறையில் திறமை மிக்கவர்கள். விரைவாக கற்றுக் கொள்கின்றார்கள். இதனால் நல்ல பயன் பெற்றுள்ளோம். இசை கல்வி மீதான அவர்களது உளமார்ந்த ஆர்வம் என்னை கவர்ந்தது என்று அவர் கூறினார்.
SONG YAN LI அம்மையார் வண்ணத்து ஹுலன்பெல் பாடல் குழுவின் கலைநிகழ்ச்சி இயக்குநராவார். அவர் கூறியதாவது
குழந்தைகளில் பெரும்பாலானோர் மேய்ச்சல் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இயற்கையாக அவர்கள் பெற்றுள்ள குரல் வளம் அனைவரையும் கவர்கின்றது. அவர்கள் பாடல்கள் மூலம் எங்களுக்கு இனிமையான உணர்வுகளைக் கொண்டு வருகின்றனர். புல்வெளியின் குழந்தை பாடல்கள், மனிதகுலத்தின் குழந்தைகளின் காலம் பற்றி வர்ணிக்கின்றன. உலகப் பொருட்காட்சி பூங்கா, எதிர்கால கனவில் மக்கள் சிளைக்கும் இடமாகும். அந்த இடத்தில் நாம் மனித குலத்தின் குழந்தை காலத்தை மீளாய்வு செய்து, இது தொடர்பான அறிவுகள் மற்றும் ஆற்றலின் மூலவளங்களைக் கண்டறிந்து மனித குலத்தின் எதிர்கால திசையை உறுதிப்படுத்த முயற்சிக்கின்றோம் என்று SONG YAN LI அம்மையார் கூறினார்.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பூங்காவில், இந்தக் குழந்தைகளின் இரம்மாயமான பாடல்கள், மகிழ்ச்சிகரமான ஆடல்கள் ஆகியவற்றின் மூலம் குழந்தைகள் அவர்களது சொந்த ஊரை பற்றி பார்வையாளர்களுக்கு வர்ணித்து, புல்வெளியில் மனித குலமும் இயற்கையும் இணக்கமாக வாழ்வதை வெளிப்படுத்துகின்றனர்.




அனுப்புதல்













