21வது நூற்றாண்டு உலகப் பார்வையிலும் நெடுநோக்குப் பார்வையிலும் இரு நாட்டுறவை வளர்க்க, சீனாவும் பிரிட்டனும் பாடுபட வேண்டும். சீனாவில் பயணம் மேற்கொள்ளும் பிரிட்டன் தலைமை அமைச்சர் டேவிட் காமெரனை 10ம் நாள் சந்தித்தபோது, சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் இதைத் தெரிவித்தார்.
ஒன்றுக்கு ஒன்று முக்கிய நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளிகளாக சீனாவும் பிரிட்டனும் விளங்குகின்றன. வளர்ச்சி வாய்ப்புகளின் மூலமாக, புதிய எரியாற்றல், புதிய மூலப்பொருட்கள் உள்ளிட்ட புதிய ஒத்துழைப்புத் துறைகளைத் தேடி, ஒத்துழைப்பை வலுப்படுத்தி, கூட்டு வளர்ச்சியை நனவாக்க இரு நாடுகளும் செயல்பட வேண்டும் என்று ஹு சிந்தாவ் கூறினார்.
சீனாவுடன் இணைந்து பாதுகாப்புவாதத்தை எதிர்க்கவும், தோஹா சுற்று பேச்சுவார்த்தையை பிரிட்டன் விரும்புவதாக, காமெரன் தெரிவித்தார்.
தவிர, சீன-பிரிட்டன் இடையே மிக உயர் நிலை இரு தரப்பு பொருளாதார வர்த்தக நடவடிக்கையாக, சீன-பிரிட்டன் தொழில் மற்றும் வணிகத் துறையின் 3வது உச்சி மாநாடு அன்று பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனத் துணை தலைமை அமைச்சர் லி க்ச்சியாங், டேவிட் காமெரன் இருவரும் இணைந்து இதில் கலந்து கொண்டனர்.