• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சியோலில் நடைபெறும் 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாடு
  2010-11-11 11:14:36  cri எழுத்தின் அளவு:  A A A   
20 நாடுகள் குழுத் தலைவர்களின் 5வது உச்சி மாநாடு நவம்பர் 11, 12ஆம் நாட்களில் தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெறவுள்ளது. மாற்று விகிதம், உலக நிதி பாதுகாப்பு இணையம், சர்வதேச நிதி அமைப்புகளின் சீர்திருத்தம், வளர்ச்சிப் பிரச்சினை ஆகிய 4 அம்சங்களைக் குறித்து உலகில் 20 மிக முக்கிய நாடுகளின் தலைவர்கள் விவாதம் நடத்துவர், உலகப் பொருளாதாரம் சர்வதேச நிதி நெருக்கடியிலிருந்து விலகி மீண்டும் அதிகரிப்பைக் காண்பதை முன்னேற்றுவதற்காக ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கைகளை அவர்கள் ஒருங்கிணைப்பர்.

தற்போது உலகப் பொருளாதாரம் மந்தமாக மீட்சி அடைந்து கொண்டுள்ள போதிலும், அதன் அடிப்படை வலுவானதல்ல. எனவே, நடப்பு உச்சி மாநாடு, "பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்ட கூட்டு வளர்ச்சி" என்ற தலைப்பில் நடைபெறுகிறது.

மாற்று விதிகம், உலகில் தற்போதைய மிகப் பெரிய கவனத்தை ஈர்க்கும் பிரச்சினையாகும். அக்டோபர் இறுதியில் தென் கொரியாவின் GYEONG JU நகரில் நடைபெற்ற 20 நாடுகள் குழுவின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி இயக்குநர்களின் கூட்டத்தில், விலை நிதானம் மற்றும் பொருளாதார மீட்சிக்குத் துணைபுரியும் நாணயக் கொள்கையை தொடர்ந்து செயல்படுத்தும் என்று இக்குழுவின் உறுப்பு நாடுகள் வாக்குறுதியளித்தன. ஆனால், 2வது சுற்று அளவான தளர்ச்சியுடைய நாணயக் கொள்கையை முன்வைப்பதாக அமெரிக்க மத்திய வங்கி நவம்பர் திங்களில் அறிவித்ததும், பல நாடுகளில் அது கவலையை ஏற்படுத்தியது. சீனத் துணை நிதி அமைச்சர் Zhu Guangyao இக்கொள்கை பற்றிய தனது கவனம் மற்றும் ஐயத்தைத் தெரிவித்ததோடு, நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் அமெரிக்காவுடன் மனம் திறந்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உள்ளதாகவும் கூறினார்.

உலக நிதி பாதுகாப்பு இணையத்தை நிறுவுவது, தென் கொரியா முன்வைத்த முக்கிய முன்மொழிவுகளில் ஒன்றாகும். நடப்பு உச்சி மாநாட்டில் தென் கொரியா முன்வைக்கும் முன்மொழிவுகளில், உலக நிதி பாதுகாப்பு இணையம் மற்றும் வளர்ச்சிப் பிரச்சினை முக்கியமாக இடம்பெறும் என்று தெரிகிறது. நிதி பாதுகாப்பு இணையத்தை நிறுவுவது குறித்து, தற்போது பல்வேறு உறுப்பு நாடுகள் உடன்பாடு கூறியுள்ளன.

2008ஆம் ஆண்டில் நிதி நெருக்கடி நிகழ்ந்தது முதல், சர்வதேச நிதி அமைப்புகளின் சீர்திருத்தம் நடைமுறை பயன் பெற்றுள்ளது. ஆனால், நல்ல வாய்ப்பாகவும் போக்காகவும் இருக்கும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று பொதுவாகக் கருதப்படுகிறது. சர்வதேச நிதி அமைப்பு முறையின் சீர்திருத்தத்தை சியோல் உச்சி மாநாடு மேலும் முன்னேற்றி, சர்வதேச நிதி அமைப்புகளில் புதிய சந்தை நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் கருத்து வெளிப்பாட்டு உரிமையையும் பிரதிநிதித்துவத்தையும் அதிகரிக்க வேண்டும் என்று சர்வதேசச் சமூகம் விரும்புகிறது.

வளர்ச்சிப் பிரச்சினை, 20 நாடுகள் குழு உச்சி மாநாட்டின் முக்கிய அம்சங்களில் சேர்க்கப்படுவது இதுவே முதல்முறை. தென் கொரிய அரசுத் தலைவர் Lee Myungbak பேசுகையில், சர்வதேசச் சமூகம் கூட்டு முயற்சியுடன் பொருளாதார வளர்ச்சியில் வளரும் நாடுகளுக்கு உதவியளிக்கும் அதேவேளை, நியாயமான உலகப் பொருளாதார ஒழுங்கையும் நிறுவ வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040