சீனாவின் குவாங்சோ மாநகரில் நடைபெறுகின்ற 16வது ஆசிய விளையாட்டுப் போட்டி 23ம் நாள் 11வது நாளாகத் தொடர்கிறது. பதக்கப் பட்டியலில் சீனா 164 தங்கப் பதக்கங்களுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
இன்று நடைபெற்ற தடகளம், துப்பாக்கிச்சுடுதல், டென்னிஸ், நீர்குதிப்பு உள்ளிட்ட போட்டிகளில், சீன வீரர்கள் 9 தங்கப் பதக்கங்களை வென்றனர்.இது வரை, தென் கொரியா 64 தங்கப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தையும், ஜப்பான் 33 தங்கப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.