இந்தியாவுக்கான சீனத் தூதர் zhang yan ஆகஸ்ட் 3ம் நாள் இந்தியாவில் பயணம் மேற்கொண்ட சீனாவின் 16 செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசினார்.
புது தில்லி, பெங்களூரு முதலிய நகரங்களில் அவர்கள் பயணம் மேற்கொண்டனர். இந்திய வெளியுறவு அமைச்சரையும் தொழில் மற்றும் வணிக அமைச்சரையும் அவர்கள் பேட்டியெடுத்தனர். இப்பயணம் மூலம், இந்தியா பற்றிய புரிந்துணர்வை செய்தியாளர்கள் ஆழமாக்கி, சீன-இந்திய உறவு மேலும் வளர்வதை முன்னேற்ற வேண்டும் என்று zhang yan விருப்பம் தெரிவித்தார்.

சீனாவின் விசா விண்ணப்பச் சேவை மையத்தை zhang yan ஆகஸ்ட் 4ம் நாள் பார்வையிட்டார். இந்த மையம் நிறுவப்பட்ட 3 ஆண்டுகளில், 4 இலட்சத்து 70 ஆயிரம் விசா விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. சீனாவுக்கு வந்த இந்தியாவில் வாழ் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு தொடர்புடைய வசதியையும் சேவையையும் இந்த மையம் வழங்குகின்றது.

இந்த மையத்தின் பணியை zhang yan பாராட்டினார். இது, சீனாவும் இந்தியாவும் கூட்டாக பாடுபடுவதற்கான எடுத்துக்காட்டாகும் என்று அவர் தெரிவித்தார்.




அனுப்புதல்













