
சீன வானொலிச் செய்தியாளர்களின் திபெத் பயணம் என்ற தலைப்பிலான பேரளவு பன்மொழி பல்லூடக செய்தி அறிவிப்பு நடவடிக்கை 9ம் நாள் நிறைவடைந்தது.
இந்த நடவடிக்கை, திபெத் அமைதி விடுதலை பெற்றதன் 60வது ஆண்டு நிறைவு பற்றிய சீன வானொலியின் சிறப்பு செய்தி அறிவிப்பு நடவடிக்கைளில் முக்கிய ஒன்றாகும். ஆகஸ்டு திங்கள் முதல் நாள் தொடக்கம், சீன வானொலியின் ஆங்கிலம், ஜெர்மன், இத்தாலி, ஹிந்தி, நேபாளம், தமிழ், வங்கம் செக் ஆகிய மொழிப் பிரிவுகளைச் சேர்ந்த 40க்கும் அதிகான சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்கள் இப்பணிப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர். திபெத் சமூகப் பொருளாதார வளர்ச்சி, தேசிய இனப் பண்பாடு, மதப் பாதுகாப்பு மற்றும் பரவல் ஆகிய அம்சங்கள் பற்றி, அவர்கள் பல்லூடகவழி அறிவிப்புகளை பன்முகங்களிலும் வெளியிட்டுள்ளனர்.




அனுப்புதல்













