• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தின் சுற்றுலா துறையின் வளர்ச்சி
  2011-08-17 15:11:07  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆகஸ்ட் திங்கள், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் சுற்றுலா மேற்கொள்வதற்கான பொன்னான காலமாகும். இப்பிரதேசத்தில், எழில் மிக்க இயற்கைக் காட்சிகளையும் பண்பாட்டுக் காட்சிகளையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் கண்டுரசிக்காலம்.


கடந்த சில ஆண்டுகளில், சுற்றுலா தொடர்புடைய வசதிகளை திபெத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. சுற்றுலாத் துறை, திபெத் பிரதேசத்தின் முக்கிய தொழில் துறையாக மாறியுள்ளது. சுற்றுலாத் துறையை திபெத் பெரிதும் வளர்க்கும். இவ்வாண்டில், திபெத் சுற்றுலாத் துறை ஏறக்குறைய 80 இலட்சம் பயணிகளை உபசரிக்கத் திட்டமிட்டுள்ளது. 2015ம் ஆண்டின் இறுதியில், உபசரிக்கும் பயணிகள் எண்ணிக்கை ஒரு கோடியே 50 இலட்சத்தைத் தாண்ட திபெத் பாடுபடும் என்று இத்தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த சுற்றுலா பணிக்குப் பொறுப்பான அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

சீனாவின் ஹய்நான் மாநிலத்தின் wanglin அம்மையார் கூறியதாவதுநான் திபெத்தில் 10 நாட்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றேன். இங்குள்ள இயற்கைக் காட்சிகளும் பண்பாட்டுக் காட்சிகளும் மிகுந்த ஈர்ப்பு ஆற்றலைக் கொண்டவை என்று அவர் குறிப்பிட்டார்.

திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சுற்றுலா ஆணையத்தின் தொடர்புடைய புள்ளிவிபரங்களின்படி, இவ்வாண்டின் முதல் 7 திங்களில், சுமார் 40 இலட்சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை திபெத் உபசரித்துள்ளது. சுற்றுலா வருமானம் 410 கோடி யுவானை எட்டியது. இது, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட, 40 விழுக்காடு அதிகமாகும்.தற்போது, திபெத்தில், மேலதிகமான விவசாயிகளும் ஆயர்களும், சுற்றுலாத் துறையின் வளர்ச்சியிலிருந்து நன்மையைப் பெறுகின்றனர்.

பயணிகளுக்கு உடை, உணவு, உறைவிடம் ஆகிய சேவைகளை அவர்கள் வழங்குகின்றனர். தனிச்சிறப்பு வாய்ந்த உணவு வகைகளை நாங்கள் பயணிகளுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். எமது சேவைகள், பயணிகளால் வரவேற்கப்படுகின்றன. மேலதிகமான பயணிகள் திபெத்தில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள வேண்டுமென விரும்புகின்றோம் என்று gesang என்பவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040