• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தின் பாரம்பரிய பண்பாட்டுப் பாதுகாப்பு
  2011-08-22 18:30:56  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் 3வது திபெத் பண்பாட்டுக் கருத்தரங்கு 21ம் நாள் நிறைவடைந்தது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் திபெத்தியல் நிபுணர்கள் இதில் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர். திபெத்தின் பாரம்பரியப் பண்பாட்டைப் பேணிக்காக்க சீன நடுவண் அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளையும் பெற்றுள்ள சாதனைகளையும் அவர்கள் ஆக்கமுடன் உறுதிப்படுத்தினர். திபெத்தின் பண்பாட்டை அழிப்பது பற்றி வெளிநாடுகளில் செய்யப்படும் பரப்புரைகள் தீய நோக்கமுடையவை என்று அவர்களில் சிலர் தெரிவித்தனர்.


கடந்த 30க்கும் அதிகமான ஆண்டுகளில் 30 முறை திபெத்துக்குச் சென்று பார்வையிடுவதில் ஈடுபட்ட உலக வர்த்தக அமைப்பின் செயலாளர் wu shu qing அம்மையார் வெளிநாடுகளில் சில செய்தி ஊடகங்கள் திபெத் பற்றியும் திபெத்தின் பண்பாடு பற்றியும் அறிவித்த செய்திகள் சரியானதல்ல. திபெத்தின் பண்பாடு பலவீனப்பட்டு அழியும் நிலையில் உள்ளதென்ற கருத்தை இந்த செய்தியறிவிப்பு மக்களின் மனதில் பதிவு செய்ய முயன்றதது. ஆனால் உண்மையில் சீன நடுவண் அரசு திபெத்தின் பண்பாட்டை வெளிக்கொணர்வதிலும் அதைப் பாதுகாப்பதிலும் மிகவும் கவனம் செலுத்தியதோடு அதற்கான ஒதுக்கீட்டை தொடர்ந்து அதிகரித்துள்ளது என்று wu shu qing அம்மையார் கூறினார்.


பிரிட்டனின் Cambridge பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான திபெத்தியல் நிபுணர் Hildegard Diemberger அம்மையார் திபெத்தின் பாரம்பரியப் பண்பாட்டுப் பாதுகாப்பில் மிகவும் உள்ளார்ந்த ஆற்றலை கண்டறிந்து இதன் எதிர்காலம் குறித்து நம்பிக்கைக் கொள்வதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040