கொல்கத்தா தலைவர் மற்றும் தொழில் முனைவோர் வளர்ச்சிக் கழகத்தின் அழைப்பை ஏற்று, கொல்கத்தாவிலுள்ள சீன துணைத் தூதர் சாங் லி சுங், அந்த கழகத்தின் புதிய மாணவர் வரவேற்பு விழாவிலும், சீன திரைப்பட வாரம் என்ற நடவடிக்கையின் துவக்க விழாவிலும் கலந்துகொண்டார். சீன மொழியை கற்றுக்கொண்டு, சீன-இந்திய நட்புறவுப் பாலமாக மாற வேண்டும் என்று அவர் இந்திய மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
கடந்த சில ஆண்டுகளில், சீன-இந்திய உறவு, பெரும் முன்னேற்றங்களை பெற்றுள்ளது. இரு நாட்டு வர்த்தகத் தொகை, 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 20 மடங்கு அதிகரித்துள்ளது. இந்திய மாணவர்கள் சீன மொழியை அறிவதன் மூலம், மேலதிக வேலை வாய்ப்புகளை பெற முடியும் என்று zhang li zhong தெரிவித்தார்.
சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையில் பண்பாட்டுப் பரிமாற்றம் நீண்ட வரலாறுடையது. மொழிக் கல்வி, இரு நாட்டு மக்களுக்கிடையிலான நட்புறவை ஆழமாக்குவதற்கு துணை புரியும் என்று அவர் தெரிவித்தார்.




அனுப்புதல்













