ICBC எனப்படுகிற சீனத் தொழில் மற்றும் வணிக வங்கியின் மும்பை கிளை வங்கி துவக்க விழா 15ம் நாளிரவு இந்தியாவின் மும்பை நகரில் நடைபெற்றது. சீனாவிலிருந்து இந்தியாவில் அலுவல்களை செயல்படுத்துகிற முதல் வங்கி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கான சீனத் தூதர் சாங் யான், சீனத் தொழில் மற்றும் வணிக வங்கியின் தலைவர், இதர வணிக மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்பட சுமார் 500க்கும் அதிகமான பேர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த மும்பை கிளை செயல்பட துவங்குவது, இரு நாட்டுப் பொருளாதார ஒத்துழைப்பு உறவு மேலும் வளர்ச்சியடைவதில் காணப்படுகிற புதிய முன்னேற்றம் என்று சீனத் தூதர் சாங் யான் தெரிவித்தார்.
தற்போது, சீனா, இந்தியாவின் முதல் பெரிய வர்த்தக கூட்டாளியாக மாறியுள்ளது. அதேவேளையில், இந்தியா, சீனாவின் 10 பெரிய வர்த்தக கூட்டாளிகளில் ஒன்றாகும். இரு நாட்டுப் பொருளாதார ஒத்துழைப்பைத் தூண்டுவதில், இந்த கிளை வங்கி முக்கிய பங்களிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சீனத் தொழில் மற்றும் வணிக வங்கியின் மும்பை கிளை மூலம், இந்திய தொழில் நிறுவனங்கள் சீனாவில் வர்த்தகம் மேற்கொள்வதற்கு வசதி அளிக்கப்படும். இந்நிலையில், இரு நாட்டு வர்த்தக உறவு மேலும் வளர்க்கப்படும் என்று இந்திய சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனச் சங்கத்தின் தலைவர் சி.சலுன்கே தெரிவித்தார்.




அனுப்புதல்













