அக்டோபர் 20ஆம் நாளிரவு, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி க்ளிண்டன் அம்மையார் இஸ்லாமாபாத் சென்றடைந்து, பாகிஸ்தானில் 2 நாட்கள் நீடிக்கும் பயணம் மேற்கொள்ளத் துவங்கினார். பயணத்தின் போது, ஹிலாரி களிண்டன் அம்மையார் பாகிஸ்தான் அரசுத் தலைவர் ஆசிஃப் அலி சர்தாரி, தலைமையமைச்சர் யூசுப் ராசா கிலானி, தரைப்படையின் முதன்மைத் தலைவர் கயானி உள்ளிட்ட பாகிஸ்தான் அரசியல் மற்றும் ராணுவ வட்டாரங்களின் முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். இரு நாட்டுறவை மேம்படுத்துவது உள்ளிட்ட பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் பற்றி இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்துவர் என்று பாகிஸ்தான் செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.
ஹிலாரி க்ளிண்டன் அம்மையாரின் பயணத்தில், சில பிரச்சினைகள் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். முதலாவது, நவம்பர் 2ம் நாள் மற்றும் டிசம்பர் 5ம் நாள், துருக்கியின் இஸ்தான்புல் நகரிலும், ஜெர்மனியின் Bonn நகரிலும் முறையே நடைபெறும் ஆப்கானிஸ்தான் பிரச்சினை தொடர்பான கூட்டங்களுக்கு ஆயத்தம் செய்வது அவரது பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
இரண்டாவது, புர்ஹனுதீன் ரப்பானியின் இறப்புக்கு பிந்தைய காலத்தில் ஆப்கானிஸ்தான் அரசியல் அமைதி வளர்ச்சிப் போக்கினை இப்பயணம் மூலம் தொடர்ந்து தூண்டுவதாகும். ஆப்கானிஸ்தான் உயர் நிலை அமைதிக் குழுவின் முன்னாள் தலைவர் ரப்பானி கடந்த திங்கள் படுகொலைச்செய்யப்பட்டதற்கு பின், ஆப்கானிஸ்தான் அமைதி வளர்ச்சிப் போக்கு தேக்க நிலையில் சிக்கியுள்ளது. ஹிலாரி க்ளிண்டன் அம்மையாரின் பாகிஸ்தான் பயணம், அமைதி வளர்ச்சிப் போக்கினைத் தூண்டுவதில் பாகி்ஸ்தானின் பங்கை தொடர்ந்து வலுப்படுத்துவது உறுதி.
மூன்றாவது, உறைநிலையில் சிக்கியுள்ள அமெரிக்க-பாகிஸ்தான் உறவை மேம்படுத்துவது, அவரது பயணத்தின் இன்னொரு நோக்கமாகும். இரு தரப்புகளுக்கிடை நம்பிக்கையையும், இரு தரப்பு நெடுநோக்குப் பேச்சுவார்த்தை அமைப்பு முறையையும் மீண்டும் உருவாக்குவதைத் தவிர, உளவு, ராணுவம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புறவின் மீட்சியில் அமெரிக்கா மேலும் கவனம் செலுத்தும்.
நான்காவது, ஹிலாரி க்ளிண்டன் அம்மையாரின் பாகிஸ்தான் பயணத்தில், Haqqani வலைப்பின்னல் உள்ளிட்ட பிரச்சினைகளில் அமெரிக்கா பாகிஸ்தானுடன் தீர்வு முறையை தொடர்ந்து நாடும்.
"கடந்த சில ஆண்டுகளில் இத்தகைய அதிகமான அமெரிக்க உயர் நிலை அலுவலர்கள் இஸ்லாமாபாத்தில் பயணம் மேற்கொள்வது, இதுவே முதன்முறையாகும்" என்று பாகிஸ்தான் அலுவலர் ஒருவர் தெரிவித்தார். ஒரு புறம், ஆப்கானிஸ்தான் பிரச்சினையைத் தீர்ப்பது, அமெரிக்க-பாகிஸ்தான் உறவை மேம்படுத்துவது ஆகியவற்றில் பராக் ஓபாமா அரசின் அவசர மனநிலையை இது முழுமையாக வெளிப்படுத்துகிறது. மறு புறம், ஹிலாரி க்லிண்டன் அம்மையாரின் பாகிஸ்தான் பயணம், அரசியல் வழிமுறையில் இரு நாட்டுறவை மேம்படுத்துவதற்கான அமெரிக்காவின் இறுதியான முயற்சியாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.





அனுப்புதல்












