• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலக வர்த்தக அமைப்பின் தீர்ப்புக்கு சீனாவின் வரவேற்பு
  2011-10-29 19:03:03  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவில் தயாரிக்கப்படும் தோல் காலணிகள் பொருள் குவிப்பு விற்பனைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளும் நடவடிக்கை மீது சீனா தொடுத்த வழக்கு பற்றி உலக வர்த்தக அமைப்பின் வல்லுனர்கள் அளித்த தீர்ப்பை வரவேற்பதாக சீன வணிக அமைச்சின் செய்தித்தொடர்பாளர் Shen Dan Yang 29ம் நாள் தெரிவித்தார்.
உலக வர்த்தக அமைப்பு 28ம் நாள் வெளியிட்ட வல்லுனர் குழுவின் அறிக்கையின் படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருள் குவிப்பு விற்பனை எதிர்ப்பு விதிகளில் ஒன்று, உலக வர்த்தக அமைப்பின் தொடர்புடைய விதிகளை மீறியுள்ளது.
உலக வர்த்தக அமைப்பின் தீர்ப்பை ஐரோப்பிய ஒன்றியம் மதித்து, உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு பொருந்தாத சட்டமியற்றலையும், பாகுபாடு செய்யும் நடவடிக்கைகளையும் நீக்கி, சீனாவின் ஏற்றுமதித் தொழில் நிறுவனங்களை நியாயமாக கையாள வேண்டும் என சீனா வேண்டுகோள் விடுப்பதாக Shen Dan Yang தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040