சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் அமெரிக்க நேரம் 10ம் நாள் பிற்பகல் ஹவாய் மாநிலத்தின் தலைநகர் ஹொனோலுலுவில் அமெரிக்க தொழில் மற்றும் வணிகத் துறைப் பிரதிநிதிகளைச் சந்தித்துரையாடினார். சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வணிக ஒத்துழைப்பின் மையம் ஒன்றுக்கொன்று நன்மை தந்து கூட்டாக வெற்றி பெறுவது என்பதாகும். இந்த ஒத்துழைப்பை ஆழமாக்குவது இரு நாட்டு மக்களின் நலனுக்கு மட்டுமல்ல உலகின் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கும் செல்வாக்கு ஏற்படுத்தும். இவற்றுக்காக அமெரிக்க தொழில் மற்றும் வணிகத் துறை மேலும் பெரும் பங்கு ஆற்ற வேண்டும் என்று ஹுச்சிந்தாவ் சந்திப்பில் வலியுறுத்திக் கூறினார்.
அமெரிக்க வணிகச் சங்கத்தின் தலைவரும் பெட்டக்ஸ் விரைவு சஞ்சல் சேவை நிறுவனத்தின் முதன்மை நிர்வாகியுமான Michael Ducker உள்ளிட்ட இத்துறையின் பிரதிநிதிகள் தற்போதைய நிலைமையில் அமெரிக்க-சீன பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வளர்ப்பது பற்றி கருத்துக்களை தெரிவித்தனர். இரு நாடுகளிடை பொருளாதார மற்றும் வர்த்தக உறவு 21ம் நூற்றாண்டின் மிக முக்கிய இருதரப்புப் பொருளாதார வர்த்தக உறவாகும். இரு நாட்டுறவின் வளர்ச்சியை ஆதரிக்கும் ஆற்றலாக அமெரிக்க தொழில் மற்றும் வணிகத் துறை விளங்குகின்றது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.