• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ரஷியா உலக வர்த்தக அமைப்பில் சேர்வதற்கான பேச்சுவார்த்தை
  2011-11-11 11:48:48  cri எழுத்தின் அளவு:  A A A   

உலக வர்த்தக அமைப்பில் சேர்வதற்கான கடைசி பணிக்குழு கூட்டம் 10ம் நாள் ஸ்விட்சர்லாந்து ஜெனீவாவி்ல் அமைந்துள்ள உலக வர்த்தக அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்றது. இவ்வமைப்பில் ரஷியா சேர்வதற்கான இறுதியான ஆவணம் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. உலக வர்த்தக அமைப்பில் ரஷியா சேருவதற்கு நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து, ஏற்றுக்கொள்ளப்படும் கட்டத்தை எட்டியிருப்பதை இது வெளிப்படுத்துகிறது.

அடுத்த திங்கள் நடுப்பகுதியில் உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் நிலை கூட்டத்தில் இந்த ஆவணம் ஒப்படைக்கப்படும். அக்கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, ரஷியா உலக வர்த்தக அமைப்புடன் அதிகாரப்பூர்வ உடன்படிக்கையை உருவாக்கும். அந்த உடன்படிக்கையை ரஷிய நாடாளுமன்றத்தின் கீழ் அவை ஏற்றுக்கொண்ட பின்னர், அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில், ரஷியா உலக வர்த்தக அமைப்பின் 154வது உறுப்பு நாடாக மாறும்.

உலக வர்த்தக அமைப்பின் பணிக்குழு ஏற்றுக்கொண்ட, ரஷியா இவ்வமைப்பில் சேர்வது தொடர்பான ஆவணம் அன்றே வெளியிடப்பட்டது. இவ்வமைப்பில் சேர்ந்த பின், வெளிநாட்டு வர்த்தகத் துறையில் ரஷியா செயல்படுத்த வேண்டிய சீர்திருத்த கடமைகளும், நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளும் இந்த ஆவணத்தில் இடம்பெறுகின்றன. 57 சரக்கு வர்த்தக உடன்படிக்கைகளும், 30 சேவை வர்த்தக உடன்படிக்கைகளும் இதில் அடக்கம். உடன்படிக்கைகளின் படி, ரஷியாவின் மொத்த சுங்க வரி, 2011ஆம் ஆண்டு 10 விழுக்காட்டிலிருந்து 7.8 விழுக்காடாக குறைக்கப்படும். இவற்றில், வேளாண்ப் பொருட்களின் சுங்க வரி, தற்போதைய 13.2 விழுக்காட்டிலிருந்து 10.8 விழுக்காடாக குறைக்கப்படும். தொழிற்துறை தயாரிப்புப் பொருட்களின் சுங்க வரி 9,5 விழுக்காட்டிலிருந்து 7.3 விழுக்காடாக குறைக்கப்படும்.

ரஷியா உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த பின், பலதரப்புகளுக்கு நன்மை பயக்கும் நிலைமை உருவாக்கப்படும் என்றும், ரஷியா, உலக வர்த்தக அமைப்பின் தற்போதைய உறுப்பு நாடுகள், உலக வர்த்தக அமைப்பு ஆகியவை இதனால் நன்மைகளை பெறும் என்று உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர் Pascal Lamy 10ம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். பலதரப்பு வர்த்தக அமைப்பு முறை, வலுவான உயிராற்றல் மற்றும் ஈர்ப்பு ஆற்றலைக் கொண்டுள்ளதை ரஷியா உலக வர்த்தக அமைப்பில் சேர்வது வெளிப்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார். உலக வர்த்தக அமைப்பு ரஷியாவுக்கு நிதானமான வர்த்தக மேடையை வழங்கும் என்றும், இந்த அமைப்பில் சேர்ந்த பின், ரஷியாவின் வர்த்தக அளவு அதிகரிக்கும் வேளையில், முதலீடு உள்ளிட்ட துறைகளிலும், மேலதிக வாய்ப்புகள் ரஷியாவுக்கு கிடைக்கும் என்றும் ரஷியாவின் முதன்மை பேச்சுவார்த்தை பிரதிநிதி Maxim Medvedkov தெரிவித்தார். விதிகளை அடிப்படையாகக் கொண்ட உலகமயமாக்க வர்த்தக அமைப்பு முறைமையில் ரஷியா சேர்வது, இருதரப்பு வர்த்தகத்துக்கும் பலதரப்பு வர்த்தகத்துக்கும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஐரோப்பிய ஒன்றியம் 10ம் நாள் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040