• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலக வர்த்தக அமைப்பில் சீனா சேர்ந்த 10 ஆண்டுகள்
  2011-12-06 16:54:01  cri எழுத்தின் அளவு:  A A A   
உலக வர்த்தக அமைப்பில் சீனா சேர்ந்த பின், சீனாவின் மொத்த வெளிநாட்டு வர்த்தக அளவு விரைவாக அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை 6 மடங்காக அதிகரித்தது. வர்த்தக மிகைத் தொகை 2001ம் ஆண்டில் இருந்த 3000 கோடி அமெரிக்க டாலரிலிருந்து 2008ம் ஆண்டில் 30 ஆயிரம் கோடி அமெரிக்க டாலராக அதிகரித்தது.

அதேவேளையில், வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் துறையும் விரைவாக வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இது ஒன்றரை மடங்கு அதிகரித்தது. வெளிநாட்டு முதலீடு மற்றும் வர்த்தக மிகைத் தொகையின் அதிகரிப்புடன், சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்புத் தொகையும் வேகமாக அதிகரித்து வருகிறது. 2010ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்புத் தொகை உலகில் மொத்த அன்னிய செலாவணிக் கையிருப்புத் கொகையில் மூன்றில் ஒரு பகுதியாக மாறியது.

அதேவேளையில், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஆண்டுக்கு சராசரியாக 10 விழுக்காட்டுக்கு மேலான வேகத்துடன் வளர்ந்து வருகிறது. 2010ம் ஆண்டு சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஜப்பானைத் தாண்டியதுடன், சீனா உலகில் 2வது பெரிய பொருளாதார நாடாக மாறியது.

கடந்த 10 ஆண்டுகளில் சீனாவில் தலைகீழான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உலகப் பொருளாதார மற்றும் அரசியல் அரங்கில் சீனா ஆழ்ந்த செல்வாக்கை ஏற்படுத்தியது.

முதலாவதாக, உலகப் பொருளாதாரத்தின் அதிகரிப்பு மையம் மேலை நாடுகளிலிருந்து கீழை நாடுகளுக்கு இடம் மாறியது. 2010ம் ஆண்டு சீனா மற்றும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு உலகின் மொத்த அளவில் 11 விழுக்காடு வகித்தது. 2020ம் ஆண்டு, இந்த பங்கு 25 விழுக்காடாக மாறக் கூடும் என்று மதிப்பிடப்படுகிறது.

இரண்டாவதாக, சீனாவின் மாபெரும் தயாரிப்புத் துறையினால் மூலவளங்கள் மற்றும் எரிபொருட்களின் அதிக நுகர்வு நிலை ஏற்பட்டது. ரஷியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஆசியா ஆகியவற்றின் செழிப்பான மூலவளங்களைக் கொண்ட நாடுகள், சீனாவின் வேகமான வளர்ச்சியின் தலைமையில் விரைவாக வளர்ந்து வருகிறன.

மூன்றாவதாக, சீனாவின் வேகமான வளர்ச்சி உலக மூலதனங்களின் புழக்கத்தை அதிகரித்துள்ளது.

நான்காவதாக, சீனாவின் வளர்ச்சி உலக வெளியுறவு மற்றும் அரசியல் அமைப்புமுறையை அடிப்படையில் மாற்றியது. 7 நாடுகள் குழுவுக்குப் பதிலாக 20 நாடுகள் குழு படிப்படியாக உலக அரசியல், பொருளாதாரம் மற்றும் தூதாண்மைத் துறையின் முக்கிய ஆற்றலாக மாறியது. சீனாவைத் தலைமையாகக் கொண்ட பிரிக்ஸ் நாடுகளின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தற்போது புதிய அறைகூவல்களையும் பிரச்சினைகளையும் சமாளிக்க பொருளாதாரக் கட்டமைப்பைச் சரிப்படுத்த சீனா பாடுபட்டு வருகிறது. தொடரவல்ல வளர்ச்சி இலக்கை நனவாக்க சீனா முயல்கிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040