• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சர்வதேச அமைப்புக்கள் சீனாவுக்குப் பாராட்டு
  2011-12-11 18:13:19  cri எழுத்தின் அளவு:  A A A   
உலக வர்த்தக அமைப்பில் சீனா சேர்ந்த 10வது ஆண்டு நிறைவு தொடர்பான உயர் நிலைக் கருத்தரங்கு, டிசம்பர் 11ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. கடந்த 10 ஆண்டுகளில் சீனா அடைந்திருக்கும் சாதனைகளையும் அனுபவங்களையும் பற்றி, உலக வர்த்தக அமைப்பு, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி முதலியவற்றைச் சேர்ந்த உயர் நிலைப் பணியாளர்கள் ஆக்கமுள்ள கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஐ•நா வர்த்தக மற்றும் வளர்ச்சி மாநாட்டு அமைப்பின் செயலாளர் சுபாசாய் பனிச்பக்டி கூறுகையில், உலகின் இதரப் பிரதேசங்களிலும், பல தரப்பு வர்த்தக முறைமையிலும் முக்கிய மாற்றங்களை, உலக வர்த்தக அமைப்பில் சீனா சேர்ந்தமை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.

உலக வர்த்தக அமைப்பின் விவகாரங்களில் ஈடுபட்டு, மேலும் மேலும் திறந்த, நியாயமான சர்வதேச வர்த்தகச் சூழலைத் தொடர்ந்து தூண்ட இவ்வமைப்புக்குச் சீனா உதவி செய்ய வேண்டுமென உலக வர்த்தக அமைப்பின் பொது இயக்குநர் பாஸ்கல் லாமி விருப்பம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040