ஆகஸ்ட் 4ஆம் நாள் லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்கிய 8வது நாளாகும். அன்று வழங்கப்பட்ட 25 தங்கப் பதக்கங்களில், அமெரிக்காவும் சீனாவும் முறையே 5 தங்கப் பதக்கங்களைப் பெற்று, முதல் இரண்டு இடங்களில் உள்ளன. உபசரிப்பு நாடான பிரிட்டன் 6 தங்கப் பதக்கங்களைப் பெற்று, 3வது இடத்தில் உள்ளது.
4ஆம் நாள் நடைபெற்ற பூப்பந்துப் போட்டிகளில் சீன விளையாட்டு வீரர்கள் 2 தங்கப் பதக்கங்களைப் பெற்றனர். மகளிர் ஒற்றையர் போட்டியில் லீ சுயேருய் தமது சக அணியாளர் வாங் யீஹான்னைத் தோற்கடித்து, சாம்பியன் பட்டம் பெற்றார். மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டியில், சீனாவின் தியன் சிங் மற்றும் ச்சாவ் யூன்லெய், 2:0 கணக்கில் ஜப்பானிய வீராங்கனைகளைத் தோற்கடித்து, சாம்பியன் பட்டம் பெற்றனர். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தொடர்ந்து 5 முறைகள் சீன வீராங்கனைகள் இந்த ஆட்டத்தின் தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அன்று நடைபெற்ற தடகளப் போட்டியில் சீன வீரர் சென் திங், ஒரு மணி 18 நிமிடம் 46 வினாடி என்ற சாதனையுடன், ஆடவர் 20 கிலோமீட்டர் நடைப் போட்டியில் புதிய ஒலிம்பிக் பதிவை உருவாக்கி, தங்கப் பதக்கத்தைப் பெற்றார். சீன வீராங்கனை லீ யான்ஃபெங் மகளிர் தட்டெறி போட்டியில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.

4ஆம் நாள், நீச்சல் போட்டியின் கடைசி நாளாகும். ஆடவர் 1500 மீட்டர் சுதந்திரப் பாணி நீச்சல் இறுதிப் போட்டியில், சீன வீரர் சுன் யாங், புதிய உலகப் பதிவை உருவாக்கி, தங்கப் பதக்கத்தைப் பெற்றார். இதுவரை சீன நீச்சல் அணி நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 5 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களோடு, மிகச் சிறந்த சாதனையைப் படைத்துள்ளது.

மகளிருக்கான அணி duelling sword என்னும் வாள்வீச்சு இறுதிப் போட்டியில், சீன அணி 39:25 என்னும் கணக்கில் தென் கொரிய அணியைத் தோற்கடித்து, தங்கப் பதக்கத்தைப் பெற்றது.





அனுப்புதல்













