• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன விளையாட்டு வீரர்களின் சிறந்த போட்டி ஆற்றல்
  2012-08-08 16:32:23  cri எழுத்தின் அளவு:  A A A   

நடப்பு இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீனாவின் விளையாட்டு வீரர்கள் அதிக கவனம் செலுத்தப்பட்டனர். சீனாவின் விளையாட்டுப் பிரதிநிதிக் குழுவின் செயல்பாடுகள் குறித்து, சர்வதேசச் சமூகம் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தது. 

நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், சுன் யாங், யே ஷு வென், லின் டான், சொ கைய் முதலிய சீனாவின் விளையாட்டு வீரர்கள், தங்கப் பதக்கங்களைப் பெற்று, சில உலகச் சாதனை பதிவுகளை முறியடித்தனர். சீனாவின் விளையாட்டுப் பிரதிநிதிக் குழு, தங்கப் பதக்கங்களைத் தொடர்ந்து பெற்று வந்துள்ளது. இதனால், வளர்ச்சியடைந்து வருகின்ற சீனாவின் உயிராற்றலை உலக மக்கள் உணர்ந்து கொள்கின்றனர்.

சீனப் பெருநிலப்பகுதி மக்களின் புகழையும் பெருமையையும் லட்சக்கணக்கான ஹாங்காங் உடன்பிறப்புகள் உணர்ந்து கொள்கின்றனர். சீனாவின் வலிமையால், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள சீனர்கள் அதிகப் பெருமிதம் அடைகின்றனர். சீனாவின் விளையாட்டு வீரர்களின் சிறந்த திறமைகள், ஹாங்காங் மக்களின் ஆதரவையும் கவனத்தையும் பெற்றுள்ளன. கடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நிறைவடைந்த பிறகு, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் சீன வெற்றியாளர்கள், ஹாங்காங்கில் பயணம் மேற்கொண்டு, ஹாங்காங் மக்களுடன் ஒலிம்பிக் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
ஆனால், நடப்பு இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சில விரும்பம் இல்லாத நிகழ்வுகள் நடந்துள்ளன. சீனாவின் வீராங்கணை யே ஷு வென், தங்கப்பதக்கம் பெற்றவுடன், அவருடைய திறமை மீது காரணமின்றி ஐயம் எழுப்பப்பட்டது. இச்செயல்பாடு சீன விளையாட்டுப் பிரதிநிதிக்குழுவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

மகளிர் இரட்டையர் பூப்பந்துப் போட்டியில் கலந்து கொண்ட சீன விளையாட்டு வீராங்கணைகளுக்குத் தண்டனை விதித்தப் பிறகு, சீன விளையாட்டுப் பிரதிநிதிக் குழு, அதனை அமைதியாக ஏற்றுக்கொண்டு, அது தொடர்பாக கள ஆய்வு செய்யப்படும். அந்நிகழ்விற்கு முழுப் பொறுப்பேற்கும் என்று தெரிவித்தது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மதிப்பீடுகளான வெளிப்படை, நேர்மை, நியாயம் ஆகியவற்றிக்கு மதிப்பு அளிப்பதை இது வெளிப்படுத்தியது.

வளர்ச்சியடையும் போக்கில் சீன அச்சுறுத்தல் கோப்பாட்டையும், சீனப் பொறுப்பு கோட்பாட்டையும் போல, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியிலும் பிற இடங்களிலும் சீனாவைச் சுட்டிக்காட்டி குற்றச்சாட்டுவது, ஐயம் தெரிவிப்பது பழிதூற்றுவது ஆகியவற்றைத் தவிர்க்க முடியாது.

ஆனால், மேலதிக அன்னியர்கள், சீன விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் போது கைதட்டிப் பாராட்டி ஆரவாரிப்பது குறிப்பிடத்தக்கது.

சீன விளையாட்டுப் பிரதிநிதிக் குழு, நடப்பு இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீன வீராங்கணை யே ஷு வென் மீது தெரிவிக்கப்பட்ட ஐயத்தை அவர் அமைதியாக எடுக்க கையாண்டிருப்பது, சீனாவின் பொறுமையையும் தன் நம்பிக்கையையும் முதிர்ச்சியான நன்னடத்தையையும் வெளிப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040