எதிர்க்காலத்தில், இணையம், ஒரு முக்கிய போத்தளமாக மாறுவது உறுதி என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் Leon Panetta 6-ஆம் நாள் Georgetown பல்கலைக்கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவில் தெரிவித்தார். அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் இணையத்தளப் போரைச் சமாளிக்கும் திறனை வலுப்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்துக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
Leon Panettaஇன் கருத்தை பற்றி, சீன மக்கள் நாளேடு 7-ஆம் நாள் கட்டுரை ஒன்றை வெளியிட்டு, தனது கருத்தை தெரிவித்துள்ளது. இணையத்தில் இராணுவ மேம்பாட்டை உருவாக்க, சில நாடுகள் இணையத்தளப் போர் ஆற்றலின் வளர்ச்சியை விரைவுப்படுத்துகின்றன. இராணவ மோதல் இணையத்தில் ஏற்படும் இடர்ப்பாடு தொடர்ந்து அதிகரிப்பதற்கு இது வழிக்காட்டும். இதனால், பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கான அச்சுறுத்தல் நாளுக்கு நாள் தெளிவாக காணப்படுகிறது. இதுவும், மனிதச் சமூகத்துக்கு, மதிப்பிட முடியாத அழிவையும் விளைவையூம் தரும் என்று இக்கட்டுரை கருதுகின்றது.




அனுப்புதல்













