• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குவோ குவாங் Cibn
  2011-01-19 15:55:29  cri எழுத்தின் அளவு:  A A A   
Guoguang பங்குகளைக் கட்டுப்படுத்துகின்ற கூட்டு நிறுவனம், சீன வானொலி நிலையத்தால் உருவாக்கப்பட்ட பண்பாட்டுத் துறையின் இயக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் மேடையாக திகழ்கிறது. இந்த மேடை மூலமாக, செய்தி ஊடகம் மற்றும் பண்பாட்டுத் துறையின் அளவை விரிவாக்கி, இத்துறையின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்ல சீன வானொலி நிலையம் முயற்சி செய்து வருகிறது.

சீன வானொலி நிலையத்தின் வணிக அடிப்படையிலான அனைத்து ஊடகம் மற்றும் பண்பாட்டு மூலவளங்களையும் பயன்டுத்துவதன் மூலம், ஊடகங்களின் ஒன்றிணைப்பு, ஊடகச் சேவை தொடர்பான முதலீடு, வளர்ச்சி, நிர்வாகம் ஆகியவற்றில், இந்த நிறுவனம் ஈடுபடுகிறது. ஒலிப்பரப்பு, தொலைக்காட்சி, வெளியீடு, இணையம், புதிய செய்தி ஊடகம் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களையும் அது கொள்கின்றது.

ஒலிப்பரப்பு, இணையம் மற்றும் இணைய ஒளிப்பரப்பு, செல்லிடபேசி ஒளிப்பரப்பு, வெளிநாட்டு ஒலிப்பரப்பு, பொருட்கள் வாங்க சிறப்பு ஒளிபரப்பு, ஒலித் தொழில் நுட்பம் ஆகிய துறையில் முறையே ஈடுபட்ட பல நிறுவனங்கள் தேசிய ஒலிப்பரப்புக்கான உலக ஊடக நிறுவனத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்ககது.

சீனாவில் HitFM, EasyFM, CRINewsRadio ஆகிய வானொலி சேவைகளும், CRIonline, CRI செல்லிடப்பேசித் தொலைக்காட்சி முதலிய இணைய சேவைகளும் சீன வானொலி நிலையத்தின் முக்கிய செய்தி சேவைகளாகும். இவை, பரந்தளவில் வரவேற்கப்பட்டுள்ளன.

சீன வானொலியின் GuoGuang செய்தி ஊடக தொழில்நிறுவனம், TongFang தொழில்நிறுவனம், Zhejiang செய்தியேட்டு குழுமத்தைச் சேர்ந்த Jiarong தொழில்நிறுவனம் ஆகியவை சேர்ந்து GuoGuang பங்குகளை கட்டுப்படுத்துகின்ற தொழில் நிறுவனத்தை நிறுவின. அது, தேசிய நிலை செய்தி ஊடகத்தின் ஆதரவைத் தவிர, புதிய உயர் தொழில்நுட்பம், செய்தி ஊடகத் தொழில், நிதித் தொழில் ஆகியவற்றின் முதலீட்டு அனுபவங்களையும் கொண்ட நிறுவனமாகும்.

சீன வானொலி, தேசிய வானொலி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி ஆணையத்தின் ஒப்புதலுடன் CIBNஐ துவக்கிய அதேவேளை, இந்தத் தொழில்நிறுவனம், CIBNஇன் ஒலிபரப்புக் கட்டுப்பாட்டு மேடையாகவும் நிகழ்ச்சிகளின் சேவை மேடையாகவும் இயங்கும்.

சீன வானொலி நிலையம் CIBNக்காக வகுத்த பரப்பு மற்றும் வளர்ச்சி திட்டத்தை முக்கியமாக கொண்டு, கொள்கை, தொழில், சந்தை, தொழில் நுட்பம், மனிதவளம், மூலதனம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, முன்னேறிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனுபவங்களை இந்த கூட்டு நிறுவனம் கற்றுக்கொண்டு பயன்படுத்துகிறது. கருத்து, வடிவமைப்பு, அலுவல், தொழில் நுட்பம், மேலாண்மை ஆகிய துறைகளில் புத்தாக்கத் திறனை உயர்த்தி, CIBNனின் வளர்ச்சிக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பரப்புரை ஆற்றல் அதிகரிப்புக்கும் உறுதியான ஆதரவை இது வழங்கும்.

சீன வானொலி நிலையம் ஒரு நவீன பன்னோக்க புதிய செய்தி ஊடகக் குழுமமாக மாறும் இலக்கை நனவாக்கும் வகையில், Guoguang நிறுவனம் புதிய தெளிவான முன்னேறிய பரப்புரை கருத்தை உருவாக்கி, ஒரு சந்தைமயமாக்க தேசிய நிலை சர்வதேசச் செய்தி ஊடகத்தை வளர்ப்பதில் ஈடுபடும். போதிய மூலதன ஆற்றல், நம்பத்தகு ஊடகச் சேவை, வணிக மேலாண்மை ஆற்றல் ஆகியவற்றை கொண்டு, புதிய தொழில் நுட்பம் கொண்டுவந்த வாய்ப்பை இறுகப்பற்றி, மையத் தொழில் நுட்பத்தையும் அறிவுசார் சொத்துரிமையையும் கொள்ள பாடுபடும். செய்தி, நிதி, விளையாட்டு, பொது மக்களுக்கான பன்னோக்க தகவல் சேவை முதலிய துறைகளில் Guoguang நிறுவனம் உள்நாட்டுக்கும் வெளிநாடுகளுக்கும் சேவை புரியும் பெரிய ரகப் பண்பாட்டு ஊடகத் தொழில் குழுமமாக மாற பாடுபடும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040