
Shuomoஇல் வசிப்பவர்களின் மன நிலை மேம்பாடு, மறுசீரமைக்கப்பட்ட பின் அங்கு விறுவிறுப்பாக வளர தொடங்கி சுற்றுலா தொழிலுக்கு ஒரு காரணமாக அமைந்தது. விடுமுறையின் போது அங்கு அதிகப் பயணிகள் செல்கின்றனர். இதனால் வெளி உலகத்துடன் மேலும் அதிக பரிமாற்றம் கிடைப்பதால், இங்குள்ள மக்கள் காலப்போக்கில் இயல்பாக மாறுவர்.
கடந்த 2 ஆண்டுகளில் சமூக பல்வேறு துறைகளின் அன்பும், உதவியும் வென்சுவான் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு கிடைத்தது. அடிப்படை வசதிகளின் மறுசீரமைப்போடு ஒப்பிட்டால், உளநல குணப்படுத்தல் மேலும் சிக்கலானது. இதற்கு நீண்டகாலம் தேவைப்படுகிறது. 2 ஆண்டுகள் உருண்டோடியுள்ளன. நிலநடுக்கத்திலிருந்து உயிர் தப்பிய மக்கள் புதிய வாழ்க்கையை துவக்கியுள்ளனர். அவர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ள துன்பம் படிபடியாக நீங்க வேண்டும் என்று விரும்புகிறோம்.




அனுப்புதல்













