முன்னாள் கோடைக்கால மாளிகையின் பெயர் சிங் யி மாளிகை என்பதாகும். சிங் வம்சக் காலத்தின் பேரரசர் சியே லுங் ஆட்சிக்கு வந்த 15வது ஆண்டு (1750ஆம் ஆண்டு)முதல், இது கட்டப்பட்ட தொடங்கியது. இது சீனாவின் இறுதி நிலப்பிரபுத்துவ வம்சம் கட்டிய கடைசி அரசு மாளிகை ஆகும். இது, உலகளவில் மிக பெரிய அரச மாளிகையும் ஆகும். இம்மாளிகையில், 3 ஆயிரத்துக்கு மேலான பல்வேறு பண்டைக்காலக் கட்டிடங்களும், அதன் பூங்காவில் ஷாங் மற்றும் சோ வம்சக் காலம் முதல் சிங் வம்சம் காலம் வரை சேகரிக்கப்பட்ட 40 ஆயிரத்துக்கு மேலான மதிப்புமிக்க பல்வகைத் தொல் பொருட்களும், 4 லட்சத்துக்கு மேலான தாவரவதைகளும் உள்ளன. எனவே, இந்த அரச மாளிகை அருங்காட்சியகம் என்ற பெயரைப் பெறுகிறது.
1988ஆம் ஆண்டு, கோடைக்கால மாளிகை உலகப் பண்பாட்டு மரபுச் செல்வமாகத் திறனாய்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது.




அனுப்புதல்













