
அண்மையில் சீன வானொலி நிலையம் நடத்திய 2011 சீனாவின் தலைசிறந்த நகரங்கள் பற்றிய கருத்துக் கணிப்பில், யுன்னான் மாநிலத்தின் தா லீ நகரம், தலை சிறந்த சீன பண்பாட்டு நகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அது, சா மா குதாவ் வர்த்தக பாதையில் அமைகின்ற முக்கிய நகரமாகும். சீன பெய் இன மக்கள் இங்கு கூடி வாழ்கின்றனர். 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சீனாவின் தாங் வம்ச காலத்தில், அது யுன்குய் பீடபூமியிலான மைய நகரமாகும். நீண்டகாலத்துக்குப் பின், இன்று தா லீ நகரம் மேலும் அழகாக உள்ளது. பெய் இன சிறப்பான பண்பாடும் நீண்டகால வரலாறும், அதனை புகழ் பெற்ற சுற்றுலா நகரமாக மாற்றியுள்ளனன.
Chongsheng கோயிலிலுள்ள 3 கோபுரங்கள், தாலீ நகரை சின்னப்படுத்துகின்றன. அது, சீனாவின் தெற்குப் பகுதியில் மிக பழைய, மாபெரும் கட்டிடமாகும். 3 கோப்புரங்களும், 1000 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றுடையவை. தாங் வம்ச பாணியில் கட்டியமைக்கப்பட்ட அவை, மாலைகளை சார்ந்து er hai கடலை நோக்கு அமைந்துள்ளன. அங்குள்ள பெய் இன சுற்றுலா வழிகாட்டி li meng கூறியதாவது




அனுப்புதல்













