• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகின் மிகவும் புகழ்பெற்ற இடமான சீனப் பெருஞ்சுவருக்கு
  2012-11-29 21:41:29  cri எழுத்தின் அளவு:  A A A   
எனது சீனப் பயணத்தின் இரண்டாவது நாளில் நான் இன்று சென்றது உலகின் மிகவும் புகழ்பெற்ற இடமான சீனப் பெருஞ்சுவருக்கு. காலை எட்டு மணிக்கு தாயாராகி காலை உணவினை ஓவியாவுடன் இணைந்து சாப்பிட்டோம். இன்றைய காலை உணவும் சீன வானொலியின் பணியாளர்கள் சாப்பிடும் உணவகம் தான். மிகவும் தூய்மையாக வைக்கப்பட்டுள்ள அந்த உணவகத்தில் சீன மற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்காக வெளிநாட்டு உணவு வகைகளும் தயாரித்து விற்கப்படுகின்றன.

இன்றைய எனது காலை உணவினை சற்றே சுவையானதாக சாப்பிட விரும்பினேன். அதனால் சீனாவின் பாரம்பரிய ஒரு வகையான அரிசி கஞ்சிஅதனுடன் கீரை ரொட்டி மற்றும் சீன பிரட் ஆம்லெட் ஆகியவற்றினை சாப்பிட்டோம். அதன் பின் ஹிந்திப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட சிறப்பு நேயருடன் எனது சீனப் பெருஞ்சுவர் பயணம் துவங்கியது. நேற்றய பயணத்தில் இல்லாத சிறப்பு ஒன்று இன்றைய பயணத்தில் இருந்தது. காரணம் நேற்று என்னுடன் தமிழ் பிரிவில் இருந்து நிறைமதி மட்டுமே வந்தார்கள். ஆனால் இன்று என்னுடன் இரண்டு பேர் தமிழ் பிரிவில் இருந்து இணைந்து கொண்டனர். ஒருவர் ஓவியா மற்றொருவர் மோகன். இன்றைய தினம் என்னுடன் இருவர் சேர்ந்துகொள்ளக் காரணம், சீனப் பெருஞ்சுவரை மையப்படுத்தி ஒரு சிறு ஆவணப்படம் எடுக்க உள்ளோம்.

மேலும் ஒரு நண்பர் என்னுடன் இன்றைய பயணத்துடன் இணைந்து கொண்டார். அவர் நான் ஏற்கனவே கூறிய திரு.ரவிசங்கர் போஸ், ஹிந்திப் பிரிவின் சிறப்பு நேயராக மேற்கு வங்காளத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டு இன்றைய தினம் முதல் என்னுடன் பெய்ஜிங் சுற்றுலாவில் கலந்துகொள்ள உள்ளார். இதில் எனக்கு என்ன ஒரு மகிழ்ச்சி என்றால், அவரை நான் ஏற்கனவே சந்தித்து உள்ளேன். நீண்ட காலமாக சர்வதேச வானொலிகளைக் கேட்டுக்கொண்டு இருப்பவர்.

1 2 3
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040