லாமா கோயில், சிங் வம்சத்தின் காங்சி பேரரசர் ஆட்சி புரிந்த காலத்தில் கட்டியமைக்கப்பட்டது. 300 ஆண்டுகள் வரலாறு உடைய அது, பெய்ஜிங் மாநகரிலுள்ள மிகப் பெரிய திபெத் மரபுவழி பௌத்தக் கோயிலாகும். அது, 3 அழகான தோரண வாயில்களாலும், 5 பெரிய மண்டபங்களாலும் முக்கியமாக உருவாக்கப்பட்டது. பெய்ஜிங்கில் பௌத்த வழிபாடுகள் நடைபெறும் இடமாகவும், புகழ்பெற்ற சுற்றுலா இடமாகவும், லாமா கோயில் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்ட பின், உலகில் 170க்கு மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த அரசுத் தலைவர்களும் புகழ்பெற்றவர்களும் இதனை பார்த்து மகிழ்ந்துள்ளனர். ஆண்டுதோறும், இதனை, பார்வையிட்ட சீனாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை சுமார் 20 இலட்சம் ஆகும். அதே வேளையில், அதிகமான மத நம்பிக்கையாளர்கள் இங்கு வந்து, இறை வேண்டல் செய்கின்றனர்.




அனுப்புதல்













