• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அறிவியல்:சின் ச்சியாங் பிரதேசத்தில் டைனசோர் படிமம்
  2013-01-15 16:22:30  cri எழுத்தின் அளவு:  A A A   

சின் ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் துருப்பான் எனும் இடத்தில் அண்மையில் ஜுராசிக் வகை டைனசோரின் படிமங்கள் கண்டறியப்பட்டன. அவை இதுவரை சீனாவில் கண்டறியபட்டவற்றில் மிகப் பெரிய டைனசோர் படிமங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சான்சான் சிக்தாய் என்னும் பகுதியில் 16 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய தரைப் பகுதியில் இந்த டைனசோரின் படிமங்கள் கண்டறியப்பட்டன. கண்டறியப்பட்டிருக்கும் டைனசோரின் உடல் மிகப் பெரியது. உடல் நீளம் 35 மீட்டராகவும், உடல் எடை சுமார் 30 டன்னாகவும் இருக்கக் கூடும். சீனாவில் ஜுராசிக் வகை டைனசோர்கள் பற்றிய பதிவை இது புதுப்பிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

முழு ஜுராசிக் காலத்தில் டைனசோர்கள் புவியில் ஆட்சி விலங்காக இருந்தன. துருப்பான் பிரதேசத்தில் மிக அதிக பண்டைகால உயிரினங்களின் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சீனாவில் டைனசோர் குழுக்களின் உருவாக்கம், நில அடுக்கு பிரிவு, ஜுராசிக் காலத்தின் நிலவியல் மற்றும் காலநிலை முதலியவை பற்றி ஆய்வு மேற்கொள்வது தொடர்பாக அவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று நிலவியல் வல்லுனர்கள் கூறினர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040