
கடந்த சில ஆண்டுகளில், XishuangBanna வெட்ப மண்டலத் தாவரத் தோட்டத்தின் ஆய்வுத் திறன், உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. உலக இயற்கை பாதுகாப்பு லீக், இத்தோட்டத்துடன் ஒத்துழைப்பு மேற்கொள்கின்றது. இந்த ஒத்துழைப்பு மூலம், கிழக்காசியாவின் ஆறு நாடுகளிலுள்ள இயற்கை பாதுகாப்பு மண்டலங்கள் இணைக்கப்படும். இதில், சீனா, மியன்மார், லாவோஸ் ஆகிய நாடுகளின் இயற்கை பாதுகாப்பு மண்டங்லகளை இணைக்கும் பணியை, XishuangBanna வெட்ப மண்டலத் தாவரத் தோட்டம் பொறுப்பேற்கும்.
இத்திட்டத்தின் செயல் மூலம், XishuangBannan பிரதேசத்தில் இயற்கை பாதுகாப்பு மண்டலத்தின் நிலப்பரப்பு விகிதம், 14விழுக்காட்டிலிருந்து 16விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று இத்தோட்டத்தின் துணைத் தலைவரும் டாக்டர் பட்டத்துக்கான மாணவர்களுக்கு வழிகாட்டு போராசிரியருமான லீ ச்சின் ஜுன் தெரிவித்தார்.
XishuangBanna பிரதேசம், சீனா, மின்மார், லாவோஸ் ஆகிய நாடுகளின் எல்லை பிரதேசத்தில் அமைந்துள்ளது. அதன் சிறப்பு நிலவியலும் ஆய்வுக்கான உள்ளார்ந்த ஆற்றலும் தான், இவ்வெட்ப மண்டலத் தாவரத் தோட்டம், மண்டல இயற்கைச் சற்றுச்சூழல் பாதுகாப்பு ஒத்துழைப்பில் விரிவான முறையில் பங்கெடுக்க செய்யும் காரணங்களாகும் என்று லீ ச்சின் ஜுன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
கம்போடியத் தேசிய தாவரத் தோட்டத்தை உருவாக்க உதவி செய்வது பற்றிய திட்டத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இதற்காக நிதி திரட்ட முயற்சி செய்கின்றோம். மேலும, மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளுடன் நாங்கள் ஒத்துழைப்பு மேற்கொள்கின்றோம். இந்நாடுகளின் மாணவர்கள், இங்கு கற்றுக் கொண்டு, முதுகலை மற்றும் டாக்டர் பட்டங்களைப் பெற்ற பின், நாட்டுக்குத் திரும்பி வேலை செய்வார்கள் என்றார் அவர்.
வெட்ப மண்டலத்திலுள்ள மழைக் காட்டுப் பிரதேசத்தின் பாதுகாப்பு, தற்போது மனித குலம்நீண்டக்காலமாக எதிர்நோக்குகின்றகடுமையான பிரச்சினையாகும். எடுத்துக்காட்டாக, XishuangBanna பிரதேசத்தில், அறிவியலாளர்கள் இத்தகைய பிரச்சினையை எதிர்நோக்குகின்றனர். ரப்பர் மரங்களை வளர்ப்பது, உள்ளூர் விவசாயிகளுக்கு அதிகமான வருமானத்தை தந்து, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டலாம். ஆனால், ரப்பர் மரங்களை வளர்ப்பது, நீர் மண் பராமரிப்பைச் சீர்குலைக்கும். ரப்பர் மரங்கள், வெட்ப மண்டலத்தில் மட்டும் தான் வளர்க்கப்பட முடியும். பொதுவாக, ஒரு ஹெக்டர் மழைக் காட்டில், நூற்றுக்கு மேலான உயிரினங்கள் நிலவுகின்றன. ஆனால், ரப்பர் மரங்களை வளர்க்கும் நிலம்,இதர வெட்ப மணட்ல மழைக் காடுகள் போன்றிராது. ரப்பர் மரங்களை வளர்க்கும் நிலத்தில், ரப்பர் மரங்களை தான் வளர்க்க முடியும், இதர தாவரங்களை இந்நிலத்தில் வளர்க்க முடியாது. தற்போது, ரப்பர் மரங்களை வளர்க்கும் நிலப்பரப்பு, XishuangBanna பிரதேசத்தில் 25விழுக்காடு இடத்தை வகிக்கின்றது. இது, பாதுகாப்பு மண்டலத்தின் நிலத்தை பெரிதும் தாண்டி, வெட்ப மண்டல மழைக் காட்டின் வளத்தைச் சீர்குலைத்துள்ளது. இந்த நிலைமை, மிகவும் கவலை அளிப்பதாய் உள்ளது என்று லீ ச்சின் ஜுன் தெரிவித்தார். இது பற்றி அவர் கூறியதாவது:
80-ஆம் ஆண்டுகளில், பல்கலைக்கழகத்தில்பட்டம் பெற்ற பின், நான் XishuangBannaஐ வந்தடைந்தேன். அப்போது, வெட்ப மண்டல மழைக் காடுகளின்பரப்பளவு அதிகமானதாக இருந்த்தால், அதிகமான மூடுபனி ஏற்பட்டது. பிற்பகல் 2 அல்லது 3 மணிக்களவில், இம்மூடுபனி குறைந்து நீங்கியது. ஆனால், உலக காலநிலை மாற்றம், மண்டலத் தாவரங்களுக்கான அழிவு ஆகிய காரணங்களால், இப்போது, காடுகளில் மூடுபனி மேன்மேலும் குறைந்து வருகின்றது என்றார் அவர்.




அனுப்புதல்













