முழு ஆண்டின் மின்சார நுகர்வில் 10 லட்சம் கோடி கிலோவாட்-மணிநேரத்தை தாண்டிய சீனா
சீன தேசிய எரியாற்றல் பணியகம் 17ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, 2025ஆம் ஆண்டில் சீனாவின் மொத்த மின்சார நுகர்வு வரலாறு காணாத அளவிலான 10 லட்சம் கோடி கிலோவாட்-மணிநேரத்தை தாண்டி, 10.4 லட்சம் கோடி கிலோவாட்-மணிநேரத்தை எட்டியது. இது முந்தைய ஆண்டை விட 5 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை உலகின் தனி ஒரு நாட்டில் முதல்முறையாக எட்டப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் முழு ஆண்டின் மின்சார நுகர்வை விட இரண்டு மடங்கு அதிகமாகும். மேலும், இது ஐரோப்பிய ஒன்றியம், ரஷியா, இந்தியா, ஜப்பான் ஆகியவற்றின் மொத்த வருடாந்திர மின்சார நுகர்வை விட அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
17-Jan-2026