பெரிய கொள்முதலாளர் மற்றும் விற்பனையாளரான சீனா முழு உலகிற்கும் நலன்
இவ்வாண்டின் முதல் 7 மாதங்களில் சீனாவின் சரக்கு வர்த்தகத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 17.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதில் இறக்குமதி மதிப்பு 22 விழுக்காடு அதிகரித்து, ஏற்றுமதி மதிப்பின் அதிகரிப்பு வேகத்தை விட தொடர்ந்து 5 மாதங்களாக பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இன்றைய சீனா, பெரிய விற்பனையாளராக இருந்த போதிலும், பெரிய கொள்முதலாளராகவும் உள்ளது. சீனாவின் இறக்குமதி அதிகரிப்பு உலக வர்த்தகத்தின் எதிர்காலத்துக்கு ஆதரவளிக்கிறது என்று அமெரிக்க ஊடகமான யூரேசியா ரிவியூ தெரிவித்துள்ளது. உலக வர்த்தகத்தில் சீனாவின் பங்கு இடைவிடாமல் அதிகரித்து, உலகப் பொருளாதார அதிகரிப்பை முன்னேற்றும் முக்கிய ஆற்றலாக மாறியுள்ளது என்று வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் வெளியிட்டன.
23-Aug-2026