|

வாங் சே சுன் வாழும் யூ ச்சி சான் கிராமத்தில் 60க்கு அதிகமான குடும்பங்கள் உள்ளன. பீச் மரங்களை நட்டதினால் கிடைத்த பலனைக் கண்டு, ஒவ்வொரு குடும்பமும் பீச் மரங்களை நடலாயிற்று. வருமானம் பல மடங்கு அதிகரித்துள்ளது. வாங் சே சுன்னின் அண்டை வீட்டுக்காரரான வாங் சி ஹெ கூறியதாவது,
"நிலத்தில் தானியம் பயிரிட்ட போது, அவ்வளவு செழிப்பாக வளரவில்லை. பீச் மரங்களை நட்ட பின், மொத்த ஆண்டு வருமானம் 30 ஆயிரம் யுவானாகும். இது கடந்த ஆண்டுகளை விட பெருமளவில் அதிகரித்துள்ளது" என்றார் அவர்.
பீச் மரங்களை நடுவதன் மூலம் வளமடைந்த யூ ச்சி சான் கிராமம், பல வெளியூர் விவசாயிகளை ஈர்த்துள்ளது.
1 2 3 4
|