|

அயல் வீட்டுக்காரர்களுடன் அடிக்கடி தொடர்பு கொள்ளும் குடும்பத்தினர் 24 விழுக்காடு மட்டுமே. அயல் வீட்டுக்காரரின் பெயர் மற்றும் தொழில் சுமார் 50 விழுக்காட்டினருக்கு தெரியாது என்பதை சீனாவின் மிகப் பெரிய வணிக மற்றும் தொழில் நகரான ஷாங்காய் மாநகரில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு காட்டியது. சீனாவின் தென் பகுதியில் அமைந்துள்ள சேன் சென் நகரில் இத்தகைய ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அண்டை வீட்டுக்காரர்களுடன் தொடர்பு கொண்டு பரஸ்பரம் உதவி வழங்கும் சிறந்த உறவை உருவாக்க விரும்புவதாக 90 விழுக்காட்டுக்கு மேலான நகரவாசிகள் தெரிவித்தனர் என்பதை ஆய்வின் முடிவு காட்டியது.
சுமுகமான மற்றும் இணக்கமான அயல் வீட்டுறவை கொண்டிருப்பது என்பது, ஒவ்வொரு குடும்பத்தினரின் உடல் மற்றும் மன நலத்துக்கும் வளர்ச்சிக்கும், சமூகத்தின் அமைதி மற்றும் உறுதிப்பாட்டுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று நிபுணர்கள் கருதுகின்றனர். தியன்ஜின் சமூக அறிவியல் கழகத்தின் பேராசிரியர் ஹௌ மாய் சோ கூறியதாவது—
"அயல் வீட்டுறவை அலட்சியம் செய்தால், தகவல் தொடர்பும் உணர்வுத் தொடர்பும் தடுக்கப்படும். தனிமை மற்றும் பாதுகாப்பற்ற உணர்வு கூட ஏற்பட்டு விடும். தவிர, வார நாட்களில் அயல் வீட்டுக்காரர்களுக்கிடையில் தொடர்பு பற்றாக்குறை என்பதால், சிறு விஷயங்களின் காரணமாக தேவையற்ற சண்டையும் முரண்பாடும் ஏற்படும்" என்றார் அவர்.
7 ஆண்டுகளுக்கு முன், பாரம்பரிய இணக்கமான அயல் வீட்டுறவுக்காக, தியன்ஜின் மாநகரின் ஹோ சி வட்டாரத்தில் உள்ள தியன்தா குடியிருப்பு பகுதியில் வாழும் ஆர்வம் மிக்க சிலர், அயல் வீட்டுக்காரர் தினத்தை உருவாக்கினர். குடியிருப்பு வட்டார அலுவலகத்தின் துணைத் தலைவர் ஜியௌ யாங் அம்மையார் செய்தியாளரிடம் கூறியதாவது—
"அயல் வீட்டுறவு, குடியிருப்பு மக்களின் அறிவுக்கும் குடியிருப்புப் பகுதியின் ஒட்டுமொத்த பண்பாட்டுக்கும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்துள்ளோம். எங்கள் வேலைக்கு அயல் வீட்டுறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், 1999ஆம் ஆண்டில், சுமுகமாக அயல் வீட்டுக்காரர்களுடன் பழகி, ஒன்றுபட்டு பரஸ்பரம் உதவி வழங்கி, நாகரீகத்தை கூட்டாக உருவாக்குவது என்ற தலைப்பில், அயல் வீட்டுக்காரர் தினத்தை உருவாக்கினோம்" என்றார் அவர்.
1 2 3
|