• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-08 12:57:07    
சிச்சுவானில் புனரமைப்புப் பணி

cri

சீன அரசவையின் செய்தி அலுவலகம் நடத்திய செய்தியாளர் கூட்டம் 

கடந்த ஆண்டு மே 12ம் நாள் சிச்சுவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிந்திய புனரமைப்புப் பணி பற்றி தெரிவிக்கும் விதமாக செய்தியாளர் கூட்டத்தை, சீன அரசவையின் செய்திப் பணியகம், 8ம் நாள் நடத்தியது. இப்புனரமைப்புப் பணியில், பெருமளவு சாதனைகள் காணப்பட்டுள்ளன என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணை இயக்குநர் மூஹோங் தெரிவித்தார்.

இது வரை, சிச்சுவாங், கான்சூ, ஷான்சி ஆகிய மாநிலங்களில் இருப்புப்பாதை, உயர் வேக நெடுஞ்சாலை, விமான நிலையம் முதலிய முக்கிய அடிப்படைப் போக்குவரத்து வசதிகள், பன்முகங்களிலும் சீராக்கப்பட்டு, மீண்டும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. கிராமப்புறங்களில் கட்டுமானம், சீற்ற இழப்பு தடுப்பு முதலிய திட்டப்பணிகள் பன்முகங்களிலும் துவங்கி நடைபெற்று வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது, பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களில் விவசாயிகளின் வீடுகளை செப்பனிடும் திட்டப்பணி, முழுமையாக முடிந்துள்ளது. சீரமைக்கப்பட வேண்டிய நகரவாசிகளின் வீடுகளில் 40 விழுக்காட்டிற்கு மேல், புனரமைக்கப்படத் துவங்கியுள்ளன என்று நகர மற்றும் கிராமப்புற உறைவிட கட்டுமான அமைச்சகத்தின் நகர மற்றும் கிராமப்புறத் திட்டப்பணிப் பிரிவின் தலைவர் தாங்கெய் அறிமுகப்படுத்தினார்.