• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-13 18:47:44    
சீனப் பெருநிலப் பகுதி மற்றும் ஹாங்காங்கின் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு

cri

இவ்வாண்டு ஜூலை திங்கள் முதல் நாள், ஹாங்காங், சீன தாய்நாட்டுக்குத் திரும்பிய 12வது ஆண்டு நிறைவு நாளாகும். கடந்த 12 ஆண்டுகளில், கடினமான பல இன்னல்களை ஹாங்காங் எதிர்நோக்கியது. ஆனால், சீன நடுவண் அரசு மற்றும் உள் பிரதேசத்தின் வலிமையான ஆதரவுடன், இன்னல்களைச் சமாளித்து, ஹாங்காங் மேலும் செழுமையாகியுள்ளது. நெருக்கமான பொருளாதார வர்த்தகக் கூட்டாளி ஒத்துழைப்பு உறவை பெருநிலப் பகுதி மற்றும் ஹாங்காங்கின் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் ஹாங்காங் உருவாக்கும் உடன்படிக்கை, ஹாங்காங் பொருளாதார வளர்ச்சியில், முக்கிய முன்னேற்ற பங்காற்றியுள்ள ஆவணமாகும்.

2003ம் ஆண்டின் ஜூன் திங்கள், சீன நடுவண் அரசும் ஹாங்காங்கும் இந்த ஆவணத்தில் கையொப்பமிட்டன. சரக்கு மற்றும் சேவை வர்த்தகம், வர்த்தக முதலீட்டு வசதி மயமாக்கம் ஆகியவற்றில், ஹாங்காங்குக்கு சலுகைகளை சீன நடுவண் அரசு வழங்கியது. 2004ம் ஆண்டின் ஜனவரி திங்கள் முதல் நாள், இந்த உடன்படிக்கை அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்குப் பின், தொடர்புடைய இதர 6 உடன்படிக்கைகள் இதில் சேர்க்கப்பட்டன. இந்த உடன்படிக்கைகள் தொடர்ந்து விரிவாகும் போக்கில், ஹாங்காங்கின் மேலதிகமான துறைகள் பல்வேறு நலன்களைப் பெறுகின்றன. தற்போது, ஹாங்காங்கின் பொருட்கள், சீனப் பெருநிலப்பகுதியில் நுழைய, சுங்க வரி தேவையில்லை. ஹாங்காங்கின் கணக்கர் மற்றும் சட்டத் துறை பணியாளர்கள், பெருநிலப்பகுதியில் அலுவல்களை மேற்கொள்ளலாம்.

இவ்வுடன்படிக்கையின் படி, ஹாங்காங்கின் சேவைத் துறை, பெருநிலப்பகுதிச் சந்தையில் நுழைய ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஹாங்காங் பொருளாதார அதிகரிப்பு, புதிய வளர்ச்சிக் கட்டத்தில் நுழையும் என்று ஹாங்காங்கின் பெருநிலப்பகுதி விவகார ஆணையத்தின் தலைவர் linruilin தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது:

முன்பு, ஹாங்காங் சேவைத் துறை சுமார் 7 இலட்சம் மக்களுக்குச் சேவை வழங்கியது. தற்போது, ஏறக்குறைய 5 கோடி மக்களுக்கு இத்துறை சேவையளித்து வருகிறது. இனி, 40 கோடிக்கு மேலான மக்களை இதில் சேர்க்க வேண்டும் என்பது எமது விருப்பம். இதன் மூலம், பெருநிலப்பகுதிச் சந்தையை விரிவாக்கி, ஹாங்காங் பொருளாதாரத்தை வலுப்படுத்தலாம் என்று அவர் கூறினார்.

1 2 3