• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-28 10:12:13    
எஞ்சிய சோற்றை ஒரு வகை சுவையான உணவு வகையாக மாற்றும் வழிமுறை

cri
வாணி – வணக்கம்.
க்ளீட்டஸ் – வணக்கம், எங்களோடு சேர்ந்து சுவையான சீன உணவு வகைகளின் தயாரிப்பு முறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
வாணி – தென் இந்திய மக்களின் உணவில் சாதம் அல்லது சோறு மகுக்யி இடம்பெறுகின்றது. அப்படியா?
க்ளீட்டஸ் – ஆமாம்.
வாணி – சில வேளையில், கூடுதலான சோறு தயாரிப்பது உண்டு. இந்த நிலைமையில், நீங்கள் எஞ்சிய சோற்றை என்ன செய்வீர்கள்?
க்ளீட்டஸ் – சில வேளையில், அவற்றை மீண்டும் வேகவிடுகின்றோம். ஆனால், அதன் சுவை கொஞ்சம் குறையும்.
வாணி – ஆமாம். இன்றைய நிகழ்ச்சியில் எஞ்சிய சோற்றை ஒரு வகை சுவையான உணவு வகையாக மாற்றும் வழிமுறை பற்றி அறிமுகப்படுத்துகின்றேன்.
க்ளீட்டஸ் – நல்லது.
வாணி – வடக்கு சீனாவில் மக்கள் சோற்றை தயாரித்த பிறகு, வாணலியின் உள்ளே அடியில் உள்ள சோற்றை பல்வகை சுவையான உணவு வகைகளை தயாரிக்கின்றனர். அதன் பெயர் guo ba.
க்ளீட்டஸ் – ஓ, நீங்கள் சொன்னது, வாணலியின் அடியில் ஒட்டியுள்ள பகுதி.
வாணி – ஆமாம், இன்று நாம் எஞ்சிய சோற்றைக் கொண்டு தயாரித்த உணவு வகை, guo ba இன் சுவை கிடைக்கலாம்.
க்ளீட்டஸ் – செய்முறை கடினமா?
வாணி –இல்லை. முதலில் தேவையான பொருட்கள் பற்றி கூறுகின்றேன்.

சோறு 500 அரை கிலோ
முட்டை 2
கேரட் 1
கொத்த மல்லி சிறிதளவு
வெள்ளரிக்காய் 1
வெங்காயம், இஞ்சி உரிய அளவு
காடி ஒரு தேக்கரண்டி
சர்க்கரை ஒரு தேக்கரண்டி
உப்பு ஒரு தேக்கரண்டி
உலர்ந்த தக்காளி மாவு ஒரு தேக்கரண்டி
சமையல் எண்ணெய் 4 தேக்கரண்டி


க்ளீட்டஸ் – முதலில், முட்டைகளை உடைத்து பாத்திரத்தில் கொட்டி, நன்றாக அடித்து கிளற வேண்டும். பிறகு, சோற்றை பாத்திரத்தில் கொட்டி, முட்டைகளுடன் கிளறவும்.
வாணி – இஞ்சி, வெங்காயம் ஆகியவற்றை மெல்லிய அளவாக நறுக்கி கொள்ளுங்கள். உப்பு, சர்க்கரை, காடி, உலர்ந்த தக்காளி மாவு, இஞ்சி, வெங்காயம் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் கொட்டி, நன்றாக கிளற வேண்டும்.
க்ளீட்டஸ் – கேரட், வெள்ளரிக்காய் ஆகியவற்றை மெல்லிய அளவாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அவற்றை சோறு முட்டை கலவையில் கொட்டி கிளறவும்.

வாணி – இன்று தோசைக் கல்லை பயன்படுத்த வேண்டும். அதனை அடுப்பின் மீது வைத்து, அதில் எண்ணெயை ஊற்றவும். 10 வினாடிகளுக்குப் பின், கிளறப்பட்ட சோற்றை அதில் கொட்டலாம். பெரிய தேக்கரண்டியின் அடி மூலம், சோற்றை தோசை போல அழுத்த வேண்டும்.
க்ளீட்டஸ் – ஒரு பக்கம் பொன் நிறமாக மாறிய பின், கவனமாக அதனை மறு பக்கம் திருப்பிக் கொள்ளுங்கள். இரண்டு பக்கங்களும் பொன் நிறமாக மாறிய பின், அதனை வாணலியிலிருந்து வெளியே எடுக்கலாம்.
வாணி – வாணலியை அடுப்பின் மீது வைத்து, அதில் சிறிதளவு எண்ணெயை ஊற்றவும். பிறகு, முன்பு தயாரித்த இஞ்சி, வெங்காயம் முதலியவை இடம்பெறு மசாலா சாற்றை இதில் ஊற்றவும். வேகவைத்த பிறகு, அதனை, சோறு தோசையின் மீது ஊற்றலாம்.

க்ளீட்டஸ் – அன்பு, நேயர்களே, இன்றைய சோறு guo ba தயார். சூடாகவுள்ள போது சாப்பிடுங்கள். மிகவும் சவையானது. வீட்டில் தக்காளி சாஸ் இருந்தால், அதில் தொட்டு சாப்பிடலாம்.
வாணி – சரி, நேயர்களே, சோறு guo ba தயாரிப்பு பற்றி கேட்டீர்கள்.
க்ளீட்டஸ் – இந்த நிகழ்ச்சி பற்றிய கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் தெரிவிக்க விரும்பினால், தவறாமல் எங்களுக்கு கடிதம் அனுப்புங்கள்.
வாணி – மேலும், இந்நிகழ்ச்சி பற்றிய விபரம் எமது இணைய தளத்தில் இடம்பெறுகின்றது. அதில் கண்களை கவரும் நிழற்படங்கள் உள்ளன.