சுற்றுலா பயணிகளைக் கவர்ந்து வரும் தேசிய நெடுஞ்சாலை ஜி318
2024-08-26 15:36:09

ஷாங்காய் மற்றும் சிச்சாங் ஆகியவற்றை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையான ஜி318, பயணிகளிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. குறிப்பாக, இந்த நெடுஞ்சாலையைச் சேர்ந்த செங்டு மற்றும் லாசா இரண்டு நகரங்கள் இடையேயான பகுதியில் சமவெளி, புல்வெளி, மலை, ஏரி, பனிப்பாறை, பீடபூமி போன்ற பல்வகை இயற்கைக் காட்சிகளை கண்டுரசிக்கலாம். கண்கொள்ளா எழில்மிக்க இயற்கை காட்சிகள் மற்றும் தனித்துவமான கலாச்சாரப் பாரம்பரியங்கள் ஆகியவற்றுடன், ஜி318, சீனாவின் மிக அழகிய நெடுஞ்சாலை என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்த நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தின் காங்டிங் நகரம், பண்டைய காலத்தில் தேயிலை குதிரை சாலையின் முக்கியமான நிலையமாக இருந்ததோடு, இன்றைய காலத்தில் எண்ணற்ற பயணிகளைக் கவரும் சுற்றுலா தலமாகவும் திகழ்கின்றது. 

தொடர்ச்சியாக மேம்பட்டு வரும் போக்குவரத்து வசதிகள் மற்றும் தனிச்சிறப்பான இயற்கை காட்சிகள் ஆகியவற்றை கொண்டுள்ள ஜி318 நெடுஞ்சாலை, மேலும் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும். சாலை நெடுகிலும் சுற்றுலா தொழிலின் விரைவான வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதில் ஜி318 முக்கிய பங்களிப்பை ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கது.