அமெரிக்காவின் கூடுதல் வரிக்கு சீனா கடும் எதிர்ப்பு

09:28:46 2025-04-03

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் சீனா உள்ளிட்ட பல நாடுகளின் தயாரிப்புளுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பது, உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை மீறுவதோடு, விதிகளை அடிப்படையாகக் கொண்ட பலதரப்பு வர்த்தக அமைப்புமுறையைச் சீர்குலைக்கும். இதனால், சீனா இதனை கடுமையாக எதிர்க்கிறது. நாட்டின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பேணிக்காக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வோம் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் குவோ ஜியாகுன் 3ஆம் நாள் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், வர்த்தகப் போரிலும் சுங்க வரி போரிலும் வெற்றியாளர் எவரும் இல்லை என்றும், பாதுகாப்புவாதத்திற்கு எதிர்காலம் இல்லை என்றும் தெரிவித்தார்.